கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், டாஸ்மாக் தலைமை கணக்கு அதிகாரி உட்பட பெண் அதிகாரிகளும் பிரமாண மனு தாக்கல் செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை சோதனையின் போது, நீண்ட நேரம் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாகவும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் காலையில் பணிக்கு வந்த தங்களை, நள்ளிரவில் தான் வீட்டுக்கு அனுப்பியதகாவும் கூறி உள்ளனர். மேலும், மறுநாள் விரைவாக வரும்படி கூறி விட்டதாகவும், இதன் காரணமாக, மூன்று நாட்கள் துாக்கமின்றி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர்கள், பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியதாக குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: E.D-க்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. விசாரிக்க மாட்டோம் என விலகிய நீதிபதிகள்..!

அதிகாரிகள், ஊழியர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் குடும்பத்தினரிடம் தகவல் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்றும் விசாரணையில் நேரடியாக ஈடுபடாத ஊழியர்களுக்கு, இந்த சோதனையால் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தினார்கள்,. விசாரணை என்ற போர்வையில், எந்தவொரு ஊழியரும், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற ஒரு சோதனையை சந்திக்க வேண்டியதில்லை என்றும் கூறி உள்ளனர்.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி, மனிதாபிமானமற்ற நடவடிக்கை என முறையிட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக, மார்ச் 6ம் தேதி காலை 11:54 மணிக்கு நுழைந்து, 8ம் தேதி இரவு 11:46 மணிக்கு வெளியேறி உள்ளனர். சோதனை தொடர்பாக மூன்று நாட்கள், சிசிடிவி காட்சிகள் விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பொத்தாம் பொதுவாக உள்ளது, மனுவை திருத்த உத்தரவு.. வலுவற்ற வாதங்கள் வைக்கிறதா அரசு..?