'தில்லுபாரு ஆஜா' பாடுறது STR ராஜா...! இன்னைக்கு கண்டிப்பா ட்ரீட் இருக்கு ...!
ஹரிஷ் கல்யாண் திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமான 'டீசல்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று ரிலீஸ் ஆகிறது.
ஒரு காலத்தில் பாட்டு சர்ச்சையில் சிக்கியவர் யார் என கேட்டால், எல்லோருக்கும் நினைவில் வருவது நடிகர் சிலம்பரசன் தான்.. அப்பொழுது அவர் பாடிய "பீப் பாடல்" பெரிய அளவில் தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது மற்றொரு பாடல் அனைவரையும் பாட வைத்தது. அது விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிம்பு எழுதி பாடிய பாடல் "அப்பன் மகனே வாடா". இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை தந்தது. அதனை தொடர்ந்து இன்று வெளியாகிறது சிலம்பரசனின் 'தில்லுபாரு ஆஜா' பாடல்.
தெர்ட் ஐ புரொடக்சன்ஸ், எஸ்.பி.புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தபு நினன் தாமஸ் இசையமைப்பில், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா என பல நட்சத்திர ஜாம்பவான்கள் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'டீசல்'.
இதையும் படிங்க: ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..!
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, இப்படத்திலிருந்து முதலில் வெளிவந்த ‛பீர் சாங்' பாடல் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வைரலானது. இந்த நிலையில், டீசல் படத்திலிருந்து இரண்டாவது பாடலான 'தில்லுபாரு ஆஜா' என்கிற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் பிப்ரவரி 18ம் தேதியான இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என ஹரிஷ் கல்யாண் கூறி இருந்த நிலையில் STR ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனி ..! திருமண அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்..!