என்ன ட்ரெஸ் இது..."திவ்யபாரதி அழகா... இல்ல அவர் அனிந்திருக்கும் உடை அழகா".. குழப்பத்தில் ரசிகர்கள்..!
நடிகை திவ்யபாரதியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகை திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் ஜிவி பிரகாஷும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்' இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யபாரதி, இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் தன்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார் அதை பார்த்த உடனே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன் இதனால் முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன் என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!
இதனை தொடர்ந்து நாளை திரையரங்குகளில் திவ்ய பாரதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் கடல் சார்ந்த பேய் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்படி இருக்க, தமிழ்த் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு 'திவ்ய பாரதி' மாடலாக இருந்துள்ளார். 2015ம் ஆண்டில் "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" பட்டத்தையும், அதே ஆண்டில் "பிரபலமான புதிய முகம் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார்.
பின்னர் 2016ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அழகி போட்டியில் 'பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் 2016' என்ற பட்டத்தைப் பெற்றார்.
இதனை தொடர்ந்து, மாடலிங்கில் பல்வேறு வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைக்க, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதனால் இப்படத்தில் நடித்தமைக்காக "எடிசன் விருதுகள் 2022 இல், அவர் ரைசிங் ஸ்டார் ஃபிமேல் விருதையும்" பெற்றார்.
இப்படி எல்லா துறைகளிலும் தனது உழைப்பை போட்டு இன்று நடிகையாகவும் வலம் வரும் திவ்யா, இன்ஸ்ட்டாவில் தனது மாடல் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து ரசிகர்களின் மனதை சுக்குநூறாய் உடைத்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!