×
 

கார் ரேஸுக்கு தயாராகும் நடிகர் அஜித் குமார்..! போட்டோ வெளியிட்ட AK அணியினர்..!

கார் ரேஸுக்கு தயாராகும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மனதில் உற்சாக நாயகனாக இருப்பவர்தான் நடிகர் அஜித் குமார். இவர் பார்க்க அழகாகவும் கலராகவும் இருப்பதினால் நடிக்க மட்டும் தான் செய்வார் என நினைத்தால் அதுதான் தவறு. அவர் ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த அஜித் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். 

சமீபத்தில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார்.  இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

இதையும் படிங்க: மங்காத்தா 2 குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..! பயங்கர குஷியில் அஜித் ரசிகர்கள்..!

இதனை அடுத்து தனது அணிகளை அழைத்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கார் பந்தயங்களில் கலந்து கொண்டு மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்க, பல முயற்சிகளுக்கு பின் வெளியே வந்த திரைப்படம் தான் "விடாமுயற்சி" திரையரங்குகளில் வெளியான இப்படம் சரியாக ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை எனவும் கூறிய லைக்கா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் இத்திரைப்படத்தினால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்பொழுது "குட் பேட் அக்லி" திரைப்படம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 

ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் தற்பொழுது பங்கேற்றுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் இந்த பந்தயத்தின் வெற்றி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்பொழுது நடிகர் அஜித் அதே ரேஸிற்கு மீண்டும் தயாராகும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர் அவரது அணியினர். இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் ஜெயிக்க வேண்டும் என வேண்டுதல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள்..! வெளுத்து வாங்கிய AK ரசிகர்கள்..! குளிர் காய்ந்த ப்ளூ சட்டை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share