படம் வெறித்தனமா இருக்கு.. முதல் ரிவியூவில் பாசிட்டிவ் கமெண்ட் வாங்கிய "குட் பேட் அக்லி"...!
நடிகர் அஜித்தின் படத்தை பார்த்த வெளிநாட்டு ரசிகர் ஒருவர் படம் ஹிட் என கூறியுள்ளார்.
"கெட்டதுல என்னடா நல்லது... நல்லது என்னடா கேட்டது" இந்த டயலாக்கை கேட்டால் உங்கள் நினைவுக்கு வருவது விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் "மார்க் ஆண்டனி" படத்தின் ட்ரைலர் தான். அதே போன்ற பேட்டனில் தற்பொழுது வெளியான ட்ரைலர் தான் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான "குட் பேட் அக்லி"யின் ட்ரைலர். அந்த அளவிற்கு ட்ரைலரில் பின்னி பெடலெடுத்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது இந்தப்படம்.
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல தொலைக்காட்சியின் வசமானது அஜித்தின் "குட் பேட் அக்லி"...! முன்பதிவில் ஹவுஸ் புல் லிஸ்டில் நம்பர் ஒன்..!
இப்படம் தமிழகத்தை பொறுத்தவரை இன்று மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களில் காலை 9 மணிக்கு சில ஸ்கீர்ன்களிலும் அதன் பிறகு 30 நிமிட இடைவெளிக்கு பிறகு மற்ற திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இங்கு வெளியாவதற்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குட் பேட் அக்லி திரைப்படம் முதலில் திரைக்கு வந்துள்ளது.
அதன்படி அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதன்பிறகு வடஇந்தியாவில் காலை 7.30 மணிக்கும், கர்நாடகாவில் 8.30 மணிக்கும் படம் திரைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 9 மணிக்கு திரைப்படம் திரைக்கு வெளியாகிறது.
இப்படி இருக்க, இந்த படத்திற்கான இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவிலேயே விற்று விட்டதாகவும், இதுவரை முன்பதிவில் மட்டும் சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் இப்படத்தை காண மக்கள் ஆவலாக காத்து கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலையில், படத்தை பார்த்து முதல் ரிவியூ கொடுத்துள்ளார் ஒருவர். அதன்படி, வெளிநாட்டு தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக இருக்கும் உமைர் சந்து திரைப்படத்தை ரிலீசுக்கு முன்பே பார்த்துவிட்டார்.
இதையடுத்து அவர் இணையத்தில் தனது முதல் ரிவியூவை பதிவிட்டு உள்ளார். அதில், ‛‛ஃபர்ஸ்ட் ரிவ்யூ குட் பேட் அக்லி: திரைப்படம் ஸ்டார் பவராக உள்ளது. ஸ்டைல், சண்டை, உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் ஆச்சரியமளிக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜித் குமார் மீண்டும் பழிவாங்கும் அவதாரத்தில் நடித்துள்ளார்.
விறுவிறுப்பான திரைக்கதை, குறிப்பாக கிளைமேக்ஸ் என்பது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இருக்கும்'' என்று கூறியுள்ளார். அதேடு குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு அவர் 4 ஸ்டார்களை வழங்கி உள்ளார்.
மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛ அஜித் குமாருக்கு ஹேட்ஸ்ஆஃப். நீங்கள் எப்போதும் தடைகளை உடைத்து கிளாசியான திரில்லர் படத்தை கொடுக்கிறீர்கள். என்ன மாதிரியான கிரேஸி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் இது. அனைவரும் வெறிப்பிடித்தது போல் நடித்துள்ளனர். அஜித்குமார் ஒன்மேன் ஷோவாக இருக்கிறார். கிளைமேக்ஸ் மற்றும் இண்டர்வெல் பிளாக்ஸ் சூப்பராக உள்ளது. பிஜிஎம் அருமையாக இருக்கிறது.
கதை மற்றும் திரைக்கதை என்பது சுவாரசியமானதாக இருப்பதோடு நகைச்சுவையோடும் உள்ளது. படத்தின் வசனங்கள் கைத்தட்டுகளை குவிக்கும் வகையில் உள்ளது. ரசிகர்கள் அஜித் குமாரின் புதிய அவதாரத்தை ரசிப்பார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அஜித் குமார் ரசிகர்கள் உபடத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய சிக்கலில் அஜித்தின் "குட் பேட் அக்லி"..! முதல் காட்சி கிடையாது.. படக்குழுவினர் அந்தர்பல்டி..!