×
 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்முட்டி...? விளக்கம் கொடுத்துள்ள படக்குழுவினர்..!

புற்றுநோயால் நடிகர் மம்முட்டி பாதிக்கப்பட்டுள்ளதாக வலம் வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் படகுழுவினர்.

ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் அவரை போல் மெகா சூப்பர் ஸ்டாராக இந்திய திரைப்படத் துறையில் 50வருடங்களுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வாழ்ந்து வருபவர் நடிகர் மம்மூட்டி எனப்படும் முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில். கமலஹாசனுக்கு பின் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்த சூப்பர் ஸ்டார் மம்முட்டிதான். இவர்கள் இருவரும் நடித்த "தளபதி" படத்தை இன்றும் தமிழ் மக்கள் மறக்கவில்லை. அந்த அளவிற்கு நண்பன் என்கிறால் என்னவென்று தெரியுமா என கூறி இருவரும் தங்களது நட்பை மேன்மை படுத்திய சிறந்த திரைப்படமாக இருந்தது. இப்படி மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. 

மேலும், மம்முட்டி நடிப்புக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, அதையும் தாண்டி தயாரிப்பு, தொலைக்காட்சி என பல பரிமாணத்தில் இருப்பவர். குறிப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு, "கைரளி டிவி", "பீப்பிள் டிவி" மற்றும் "சேனல் வீ" போன்ற பெயருடைய மலையாள தொலைக்காட்சி சேனல்களை தொடங்கி நிர்வகித்து வருகிறார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் சினிமா துறையில் தனக்கென 'ப்ளே ஹவுஸ்' என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 

இதையும் படிங்க: அப்போ நடிகை இப்போ போட்டோ கிராபர்....! நடிகை எடுத்த போட்டோகிராபி வீடியோ இணையத்தில் ட்ரெண்ட்...!

இப்படி தனக்கென சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் மம்முட்டி, 1971ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற படத்தில் நடித்து முதன் முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகருக்கு மேளா, வில்லனுண்டு ஸ்வப்னங்கள் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், 80களில் 200க்கும் மேற்பட்ட படங்களை  நடித்து, 90களில் பூதக்கண்ணடி, டாக்டர்.பாபாசாஹத் அம்பேத்கர், பொந்தன் மட மற்றும் விதேயன் போன்ற மலையாள படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார்.

இப்படி இருக்க, 1990ம் ஆண்டு, கே.மது இயக்கிய "மௌனம் சம்மதம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்", இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "தளபதி", இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் "கிளிப்பேச்சு கேக்கவா", என்.லிங்குசாமி இயக்கத்தில் "ஆனந்தம்" மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின் தெலுங்கில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு "சுவாதி கிரணத்தில்" நடித்தார். 

இதுவரை, 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ள மம்முட்டி, சிறந்த நடிகருக்கான 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் 13 பிலிம்பேர் விருதுகள் மற்றும் தென்னிந்தியாவின் பல விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், 1998-ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தால் "பத்மஸ்ரீ" விருது பெற்றார். இந்த நிலையில், 73 வயதான மம்மூட்டி தற்போது, மகேஷ் நாராயணன் இயக்கி வரும் "MMMN" எனற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்போது நடிகர் மம்மூட்டி இடைவெளி எடுத்துள்ளார். இதனை அறிந்த சிலர், மம்முட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டிப்பாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இணையத்தில் வதந்திகளை அள்ளித்தெளித்து வருகின்றனர். இதனை பார்த்த படக்குழுவினர் தற்பொழுது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

இது சம்மந்தமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள பதிவில் "மம்மூட்டி கடவுள் பக்தி உள்ளவர் என்பதால் தற்பொழுது ரமலான் நோம்பு கடைபிடித்து வருகிறார். இதனால், படப்பிடிப்பில் இருந்து அவருக்கு சிறிது நாள் விடுப்பு வழங்கி இருக்கிறோம். கண்டிப்பாக, அவர் திரும்பி வருவார் எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை. நோம்பு முடிந்த பின் மம்மூட்டி மோகன்லாலுடன் இணையவுள்ளார்" என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: AI தோற்றத்தில் குடும்பஸ்தன் ஹீரோயின்...! ஒரே மியூசிக் வீடியோவில் ட்ரெண்டிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share