பிரபல மாடலின் கவர்ச்சி புகைப்படம்..தெலுங்கு நடிகையின் கவர வைக்கும் போட்டோ ஷூட்..!
தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நபா நடேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபலமான மாடல் மற்றும் தென்னிந்திய நடிகையான நபா நடேஷ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இப்படிப்பட்ட நடேஷ் தனது ஆரம்பக் கல்வியை அவரது சொந்த ஊரான சிருங்கேரியில் முடித்தார். பின்னர், கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள என்.எம்.எ.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
இதனை தொடர்ந்து மாடலிங் ஆவதில் ஆர்வம் கொண்ட நபா நடேஷ்க்கு அதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. அதற்க்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரகாஷ் பெலாவதியின் வழிகாட்டுதலின் கீழ் நடிப்பு மற்றும் மாடலிங் பயிற்சி பெற்றார். அதுமட்டுமல்லாமல் நபா நடேஷ் ஒரு திறமையான பரதநாட்டிய நடனக் கலைஞர், அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடன இயக்குனராகவும் நடனப் பங்கேற்பாளராகவும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். பின் "ஃபெமினா மிஸ் இந்தியா பெங்களூரு 2013" அழகுப் போட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: கட்டும் சேலை மடிப்பில் கவர வைத்த பவித்ரா ஜனனி... இந்த சிரிப்புக்கு விலையே இல்லை.. பாராட்டும் ரசிகர்கள்..!
இதனை அடுத்து இவர் தனது பத்தொன்பது வயதில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.கடந்த 2015ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான வஜ்ரகயாவுடன் "படகா பார்வதி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து நபா நடேஷ் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், கன்னட திரைப்படமான "லீலா"திரைப்படத்தில் நடித்தார்.
பின், 2018 இல் வெளியான "நன்னு டோச்சுகுண்டுவதே" என்ற தெலுங்கு திரைப்படத்தில் மேகனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நபா தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில், அவர் மற்றொரு தெலுங்கு திரைப்படமான "அதுகோவில்" என்ற திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக, 2019ல் வெளியான தெலுங்கு திரைப்படமான "ஐஸ்மார்ட் ஷங்கர்" நடித்து தனக்கென ஒரு பட்டாளத்தை உருவாக்கினார்.
பின்னர், அவர் டிஸ்கோ ராஜா, சோலோ பிரதுகே சோ பெட்டர், அல்லுடு அதுர்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ போன்ற தெலுங்கு படங்களில் பணியாற்றினார். இந்த நிலையில், அவரது கவர்ச்சி புகைப்படம் தற்பொழுது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஹீரோவாக அவதாரம் எடுக்கும் மாதம்பட்டி.. சமையலில் கலக்கியவர் மீண்டும் சினிமாவில் கலக்க வருகிறார்..!