×
 

நான் சின்னத்திரையை விட்டு போக காரணம் இந்த சம்பவம் தான் - நடிகை காவியா ஓபன் டாக்..!

சின்னத்திரையை விட்டு நான் விலக இதுதான் காரணம் என தெரிவித்து இருக்கிறார் நடிகை காவியா. 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் பெரும்பாலும் வெள்ளித்திரையில் ஒளிபரப்பான படங்களை காஃபி அடித்து வந்த சிரியல்களாகவே பெரும்பாலும் இருக்கும், அந்த வகையில் தற்பொழுது முதல் சீசன் முடிந்து இரண்டாம் சீசனில் அடியெடுத்து வைத்து பிரச்சனைகளையே குடும்பமாக வைத்து மல்லிகை கடையை பார்த்து கொள்ளும் மூன்று அண்ணன் தம்பிகளை கொண்ட சீரியல் தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இந்த சீரியலை பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது அந்த அளவிற்கு அனைவரையும் மாற்றி வைத்துள்ளது இந்த சீரியலின் கதைக்களம். 

இந்த சூழலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்றால் அனைவரது நினைவுக்கும் வருபவர் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தான். அவரது மறைவுக்கு பிறகு அவரது இடத்தை அந்த சீரியலில் நிரப்ப கொண்டுவரப்பட்டவர் தான் காவ்யா, இவரை ஆரம்பத்தில் மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்பு திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியவர் அதற்கு பின் எந்த சீரியலிலும் நடிக்காமல் சின்னத்திரையை விட்டு முற்றிலுமாக காணாமல் போனார். 

இதையும் படிங்க: குற்ற உணர்ச்சியோட என்னால நடிக்க முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா விலகல்?

இதனை அடுத்து சின்னத்திரையை விட்டு விலகி சென்றதற்கான காரணத்தை தற்பொழுது பேட்டி வாயிலாக தெரிவித்து இருக்கிறார் காவியா. அதில், நான் சாதாரண மிடில் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவள். சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.

தனியாளாக சென்னைக்கு வந்து நடிக்க வாய்ப்பு தேடினேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு youtubeல் சின்ன சின்ன ரோல்கள் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்தேன்.

இப்படி சின்னத்திரையில் இருக்கும்போதே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் சீரியல் ஷூட்டிங் இருப்பதால் படங்களில் நடிக்க முதலில் ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் மனதில் நெருடல்கள் இருந்தது. பின் ஓரு முடிவு எடுத்தேன்.

படங்களுக்குள் செல்லவேண்டும் என்றால் சீரியலை விட வேண்டும் இல்லை என்றால் அந்த கட்டத்திற்குள்ளேயே மாட்டிக்கொள்வேன் என்பதை உணர்ந்து இனி சீரியல் வேண்டாம் என விலகி தற்போது கவின் - நயன்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அந்தரங்க வீடியோ... சீரியல் நடிகையை சீரழித்தது யார்..? போட்டோவை பகிர்ந்த ஸ்ருதி நாராயணன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share