மோடி ஆதரவாளருடன் படம் நடிக்க மறுத்த சித்தார்த்..! நஷ்ட ஈடு கேட்டு எஸ்.வி சேகர் ஆதங்கம்..!
டெஸ்ட் படத்திற்கு எஸ்வி சேகர் சாபம் விட்ட நிலையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் ஜெய் பீம் படத்தைப் போன்று netflix-ல் ஏப்ரல் 4-காம் தேதி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் நடிகர் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
படம் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் சித்தார்த் படம் குறித்து பேசுகையில், படத்தில் தனது கேரக்டரை குறித்து பேசிய நடிகர் சித்தார்த், "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுது போக்காக இல்லாமல் வாழ்க்கையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் பெரும் வெற்றி நம் வெற்றியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் பெருகியுள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் அதில் ஒருவன் தான். நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன்.
இதையும் படிங்க: "சித்தார்த் வீட்டில் சும்மாவே இருக்க மாட்டார்".. கணவரை புகழ்ந்து தள்ளிய அதிதி ராவ்..!
ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்தவர்கள் என்று பார்த்தால் என்றும் 'ராகுல் டிராவிட்' தான், என கூறினார்.
அவரை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர் மாதவன் தனது மனக்குமுறலை பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி இருந்தார். அதில் பேசிய மாதவன், " 69-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படத்துக்கான விருது விழாவில், எனது 'ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தை இயக்கிடத்திற்காக தேசிய விருதை பெற்றேன்.
ஆனால் அதனை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்கு சிறிது வருத்தம் அளித்தது. பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். என் மனதில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதை அதற்கு பின் உணர்ந்தேன் என தெரிவித்தார்.
இப்படியெல்லாம் இவர்கள் பேசி வெற்றிகராமாக வெளியான இப்படத்திற்கு, நேற்று அழகாக சாபம் கொடுத்து சென்றார் நடிகர் எஸ்வி சேகர், அந்த வகையில் அவர் வெளியிட்ட பதிவில், "என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. அந்த வரலாறு தற்பொழுது தொடர்கிறது" என அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், "டெஸ்ட்" படத்தில் எஸ்வி சேகரை நீக்கியதற்கான காரணம் கிடைத்துள்ளது.
எஸ்வி சேகரை படத்தில் இருந்து விலக செய்தவர் நடிகர் சித்தார்த் என தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் எஸ்வி சேகர் உடன் நடிக்க முடியாது என நடிகர் சித்தார்த் தான் கூறினார் என எஸ்வி சேகரிடம் கூறியுள்ளனர் படக்குழுவினர். அதிலும் 'நீங்க மோடி ஆதரவாளர், அவர் எதிர்ப்பாளர், அதனால் அப்படி சொல்கிறார்' எனவும் இதுதான் படத்திலிருந்து உங்களை வெளியேற்ற காரணமாக இருந்தது எனவும் கூறியுள்ளனர். இதனை கேட்டு கோபமான எஸ்வி சேகர், சித்தார்த் தன்னை அவமதித்து விட்டதால் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..!