கண்ணே பட்டுடும்... மனோஜ் பாரதிராஜா மனைவி & மகள்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட்!
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன்தான் மனோஜ் பாரதிராஜா
48 வயதில் ஆகும் இவருக்கு, கடந்த வாரம் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து, ஸ்டன்ட் பொருத்தப்பட்டது.
\
இதையும் படிங்க: கேட்டப்ப உதவாமா இப்ப வந்து அழுவரதுல அர்த்தம் இல்ல... மூத்த பத்திரிகையாளர் காட்டம்!!
இதன் பின்னர் வீட்டில் ஓய்வில் இருந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு, நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு இவருடைய உயிரையே பறித்துள்ளது
திரை உலகில் துணை இயக்குனராக தன்னுடைய கரியரை துவங்கி பின்னர், தன்னுடைய தந்தையின் ஆசைக்காக நடிகராகவும் மாறியவர் மனோஜ்
1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனா இந்த படத்தை பாரதிராஜா இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
\
இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் திரை உலகில் இருந்து சில காலம் விலகினார்
கதாபாத்திரங்களை தேர்வு செய்து தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் அவருக்கு அண்ணனாக, மனோஜ் நடித்திருந்தார் மேலும் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வந்த மனோஜ்
ஸ்நேக் லேட்டர் என்கிற வெப் சீரிஸ் இவர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பை தாண்டி மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனராகவும் பிரபலமான மனோஜ் பாரதிராஜா பாடல்களையும் பாடியுள்ளார்
மனோஜ் பாரதிராஜா நடிகை வந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது மனோஜ் பாரதிராஜா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காற்றில் கலந்தார் நடிகர் மனோஜ்.. பெசண்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்..!