எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் தெரியுமா..?
மார்ச் 21ம் தேதியான நாளை எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எத்தனைப் படங்கள் வெளியாகின்றன என்பது தான் தமிழ்த் திரையுலகில் முக்கியமான பேசுபொருளாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ், எந்த சின்னத்திரையை ஒருமாற்றுக் குறைவாக சினிமாக்காரர்கள் பார்த்தனரோ, அவர்களே இன்று நமது படங்கள் ஓடிடியில் வெளியாகாதா? என்று ஏங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் ஓடிடி, திரையுலகை ஆள்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அந்த வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை அதாவது மார்ச் 21-ந் தேதியன்று எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளியாகின்றன என்ற பட்டியலை இப்போது பார்ப்போம்..
இதையும் படிங்க: சைடு போஸில் சூடேற்றும் யாஷிகா ஆனந்தின் கிளாமர் கிளிஸ்க்!
தமிழ் சினிமாவின் இந்த வருட முதல் ப்ளாக்பஸ்டர் என்ற பெருமையையும், ஹாட்ரிக் வெற்றிக்கு சொந்தக்காரர் என்று கொண்டாடப்படும் ப்ரதீப் ரங்கநாதனின் ட்ராகன் படம் தான் ஓடிடியின் ஹாட் கேக்காக உள்ளது. ஓடிடி தளங்களில் ராட்சசனாக வலம் வரும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ட்ராகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. நாளை முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ட்ராகன் படத்தைக் காணலாம். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா, மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களும், மேக்கிங்கும் டாப் கிளாஸ். திரையரங்கைப் போன்றே ஓடிடி தளத்திலும் ட்ராகன் கோலோச்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆபிசர் ஆன் டியூட்டி மலையாள படமும், காக்கி பெங்கால் சேப்டர் என்ற இந்தி க்ரைம் தொடரும் நெட்பிளிக்சில் நாளை வெளியாகிறது. கூடவே க்ரைம் பேட்ரோல் என்ற இந்தி குறுந்தொடரும், தி அவுட் ரன், தி ட்விஸ்டர், ஃவோல்ப் கிங், டெனோ தீவ்ஸ், தி ரெசிடென்ஸ் ஆகிய ஆங்கில படங்களும் நெட்பிளிக்சில் வெளியாகின்றன. இதுமட்டுமல்லாது ஜெர்மானிய மொழியில் வெளிவந்த வுமன் ஆப் தி டெட் என்ற படமும், சீனமொழியில் எடுக்கப்பட்ட பிக் வேர்ல்டு ஆகிய படங்களும் வெளியாகின்றன.
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி டீசண்டான வெற்றியைப் பெற்ற நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படம், இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. தனுஷின் அக்கா மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் கோல்டன் ப்ளவர் பாடல் இப்படத்திற்கு மிகப்பெரும் ஓபனிங்கை கொடுத்தது எனலாம். இப்படம் ப்ரைம் அமேசான் மற்றும் சிம்ப்லி சௌத் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் நாளை வெளியாகிறது. கூடவே நோடிதரு எனாந்தரே என்ற கன்னட படமும், டைலர் பெர்ரி டூப்ளிசிட்டி என்ற ஆங்கில படமும் ப்ரைம் அமேசான் தளத்தில் நாளை ரிலீசாகிறது.
இந்த வருடத்தின் ஆஸ்கர் மேடையை அலங்கரித்த அனோரா திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை காணக்கிடைக்கும். விக்கிடு, முஸ்லிம் மேட்ச்மேக்கர், குட் அமெரிக்கன் பேமிலி ஆகிய ஆங்கில படங்களும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகின்றன.
அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் 'பேபி & பேபி'. இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். குழந்தையை மையப்படுத்தி அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'பயர்'. இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. கூடவே தினசரி, மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் ஆகிய படங்களும் டென்ட்கொட்டா தளத்தில் ரிலீசாகிறது.
இதையும் படிங்க: 'ஃபயர்' சாக்ஷி அகர்வாலின் திரையுக வாழ்க்கையில் புதிய உச்சம்!