அஜீத் படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு... கடுப்பான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்!!
அஜீத் நடுத்த குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த இளையராஜாவை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் விமர்சித்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஜித்தின் 63 வது படமான இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 30.9 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்தது.
அதாவது இதுவரை வெளியான அஜித் படங்களில் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக இந்த படம் மாறியது. இந்த நிலையில் தனது பாடல்களை தேவையில்லாமல் வேறு ஒரு இசையாக மாற்றி கெடுத்துவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து இளையராஜா தரப்பு 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்தின் கூலி, மஞ்சுமெல் பாய்ஸ் என வரிசையாக பல படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை இயக்குநர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் ஒவ்வொரு படத்துக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்புவது தொடர்கதையாகி வருகிறது.
இதையும் படிங்க: பெற்ற தாய்க்கும் கட்டின மனைவிக்கும் பிரம்மாண்ட கோவில்..! ராகவா லாரன்ஸை ஃபாலோ செய்த மதுரை முத்து..!
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் 3 பாடல்களை ஆதிக் ரவிச்சந்திரன் வரிசைக் கட்டி வைத்த நிலையில், தற்போது அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என்னடா ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன், பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களிடம் தான் உள்ளது.
அவருடைய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க சொல்லுங்க என தெரிவித்துள்ளார். இளையராஜா சட்டப்படி தான் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் அவருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் ஏன் இத்தனை பாடல்களை வைத்தார் என்று இளையராஜா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனைத்து தயாரிப்பாளர்களிடமும் என்ஓசி வாங்கிய பின்னர் தான் ஆதிக் இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளார். இளையராஜாவுக்கும் இந்த பாடல்களின் உரிமைக்கும் சம்மந்தம் இல்லை என அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாவு பயத்தில் இளையராஜா... குடும்பத்தை நினைத்து கண்ணீர்!!