விஜயின் அரசியலால் மகன் சஞ்சய்க்கு சிக்கல்.. 3 நாளில் பேக்கப் ஆன சூட்டிங்... லைகா அதிரடி முடிவு..?
திட்டம் போட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் வெவ்வேறு கோணத்தில் அழுத்தம் வருவதாக சொல்கிறார்கள்.
நடிகர் விஜய் மகன், ஜேசன் சஞ்சய் ஹீரோவாக கோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்த்தால் லண்டனில் படிப்பை முடித்த கையோடு இயக்குனர் அவதாரம் எடுத்தார். கோலிவுட்டில் லைகா நிறுவனம் கால் பதிக்க விஜயும் ஒரு காரணம், ஆகையால், கண்ணை மூடிக்கொண்டு ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்தது லைகா நிறுவனம் .
விஜயின் மகன் இயக்கும் படம் என பெரும் எதிர்பார்ப்பு சுற்றிக் கொண்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்திப் கிஷன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்நிலையில் சேசன் சஞ்சய் இயக்கம் ஷூட்டிங் பணிகள் தொடங்கியதில் இருந்து சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு ஜேசன் சஞ்சய் குறும்படங்கள் எடுத்திருந்தாலும், அவருக்கு இயக்கத்தில் பெரிய அளவில் அனுபவம் இல்லை. இது ஒரு பக்கம் இருக்க, ஜேசன் சஞ்சயை நம்பி பெரும் தொகையை செலவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கும் லைகா நிறுவனம், ஷூட்டிங் பணிகளை மேற்பார்வவிட சஞ்சயின் பெரியப்பா சஞ்சீவைமேற்பார்வையிட ஏற்பாடு செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ராந்தின் அண்ணன்தான் இந்த சஞ்சீவ். அவருக்கு ஏற்கனவே திரைப்படம் இயக்கிய அனுபவங்கள் இருப்பதால் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில் முடிவு செய்து சூட்டிங் பணிகளும் தொடங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...!
ஆனால், மூன்று நாட்கள்கூட முழுமையாக சூட்டிங் நடக்கவில்லை என கூறப்படுகிறது. திட்டம் போட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் வெவ்வேறு கோணத்தில் அழுத்தம் வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக சூட்டிங்கிற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கி விட்டு சென்றால் பாதியிலேயே நிறுத்தச் சொல்லி இடைறுகள் வருவதாகக் கூறுகிறார்கள். இப்படியே மூன்று ஷெட்டியூல்டு பாதியிலேயே நின்று போன நிலையில் தற்காலிகமாக சூட்டிங் பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு வரும் இடையூறுக்கு பின்னணியில் விஜயின் அரசியல் பிரவேசமும் ஒரு காரணம் என்பதால் ஜேசன் சஞ்சய் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் மகன் படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக வெளியான தகவலுக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை விசாரித்தபோது இன்னும் பல தகவல்களும் கிடைத்தது. ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா நிறுவனம் பெரிய அளவில் வெற்றிகளைக் கொடுக்காமல் அடுத்தடுத்து தருமாறு வருகிறது.
இந்தியன்-2 திரைப்படம் லைகாவுக்கு பெரும் இடியாக மாறிய நிலையில், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் லைகா நிறுவனத்தின் ஹாலிவுட் பிசினஸ் குறைய தொடங்கி விட்டது. ஆகையால், விஜயின் மகன் இயக்கும் படம் கம்பேக் கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லைகாவுக்கு ஷூட்டிங்கிலேயே இவ்வளவு சிக்கல் வருவது சோர்வை கொடுத்துள்ளது. அதோடு படத்தை முடித்துக் கொடுக்க ஜேசன் சஞ்சய் தயாராக இருந்தாலும், ஷூட்டிங் உள்ளிட்ட பணிகளில் வரும் சிக்கலை தயாரிப்பு நிறுவனம் சரி செய்யவே தடுமாறுவதாக சொல்கிறார்கள்.
இதன் காரணமாக லைகாவும், ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்திலிருந்து விலகும் முடிவை எடுக்க வந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி லைகா நிறுவனம் படத்தில் இருந்து விலகினால் முக்கிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றுஜேசன் சஞ்சயுடன் கைகோர்க்கும் முடிவில் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. வேறு தயாரிப்பு நிறுவனத்திடம் திரைப்படத்தை கைமாற்ற லைகாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டு மார்ச் 15 ஆம் தேதிக்கு மேல் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த லைகா, கையில் இருக்கும் ஒரு படத்தையும் கைமாற்றி விடும் முடிவில் இருப்பது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆக மொத்தத்தில் அப்பாவால் எண்ட்ரி கொடுத்த லைகா மகன் படத்தில் சினிமா துறையைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: விடாமுயற்சியோடு உயிர் காக்கும் சேவை... ஒன்றிணைந்த தல - தளபதி ஃபேன்ஸ்!