எல்லோருக்கும் தெரிந்த நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா" என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் என மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது. இப்படி பல படங்களில் நடித்து கடைசியாக புஷ்பாவில் "ஓ சொல்றியா மாமா" என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியிருப்பார்.

இப்படி திரை துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இதனால் மனவேதனையில் இருந்த சமந்தா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
இதையும் படிங்க: ஒரே டீவி.. இரண்டு ஹீரோயின்... இந்த சீரியல் பிரபலத்துக்கு வளைகாப்பா..!

இந்த சூழலில் சமந்தாவினுடைய இன்ஸ்டா ஸ்டோரி பலரால் பேசப்பட்டு வருகிறது. பல குடும்பங்களில் மௌனம் என்ற வார்த்தையை கேட்க சந்தோஷமாக இருக்கும் என பலர் சமூகவலைத்தளங்களில் விளையாட்டாக பதிவிட்டு வருவதுண்டு.ஒரு நாள் மௌனமாக இரு எந்த பிரச்சனையும் வராது என்பார்கள். வடிவேலு கூட ஒருமணி நேரம் பேசாமல் வேலையே செய்யாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை படத்தில் காமெடி காட்சியாக வைத்திருப்பார். அதே போல் ஈஷா யோகா மையம் சென்ற நடிகை சமந்தா மூன்று நாட்கள் "மவுன விரதம்" இருந்து உள்ளார்.

பல நடிகர் நடிகைகள் பெரிதும் சமாதானத்திற்காகவும் மன அமைதிக்காகவும் செல்லும் இடமாக தற்பொழுது ஈஷா யோகா மையம் மாறி உள்ளது. இந்த நிலையில், நீண்ட காலமாகவே ஈஷா அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகை சமந்தா, சமீபத்தில் ஈஷா யோகா மையத்துக்கு சென்று, அங்கு மூன்று நாட்கள் "மவுன விரதம்" கடைபிடித்துள்ளார்.

இதை பற்றி இணையத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, தொலைபேசியில் இருந்து விலகி இருப்பது, யாரிடமும் பேசாமல் தனிமையாக இருப்பது என்று மூன்று நாட்களை தான் கடை பிடித்ததாக, மீண்டும் தொலைபேசி வாயிலாகவே இணையத்தில் தெரிவித்த அவர், இது ஒரு பயங்கரமான அனுபவமாக இருப்பதாகவும், இது போன்ற மவுன விரதத்தை மீண்டும் முயற்சிப்பேன் என்றும் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதனை பார்த்தாவது எல்லோரும் ஒருநாளாவது மவுன விரதம் எடுங்கள். மன அமைதி முதல் வியாதி வரை எதுவும் வராது என நாசுக்காக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மரியாதையே கொடுக்கல.. இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையே இல்ல.. வெளியேறிய நடிகை..!