தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ்.

2015-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த, இது என்ன மாயம் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: உள்ளாடை தெரிய.. ஓவர் கோட் போட்டு வெட்டிங் பார்ட்டியில் கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ்!
முதல் படம் தோல்வியை தழுவினாலும், இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, ரஜினி முருகன் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே டார்கெட் செய்து கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

அந்த வகையில் மிக குறுகிய காலத்திலேயே தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷுக்கு அவரின் காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வெட்டிங் போட்டோசை இப்போது வெளியிட துவங்கி உள்ளார்.

தற்போது கணவர் ஆண்டனி தட்டில் குடும்ப வழக்கப்படி நடந்த கிறிஸ்டியன் வெட்டிங்கின் போது, வெள்ளை உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மணமகள் கம்மல்... ஆட்டோவில் என்ட்ரி; கவர்ச்சி உடையில் கீர்த்தி கொண்டாடிய மருதாணி கொண்டாட்டம்!