மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிப். 4ஆம் தேதி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. ஆர்ப்பாட்டத்தில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, எந்த முழக்கங்களையும் எழுப்பக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். 'திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்' உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை ஹெச். ராஜா பேசியிருந்தர். இந்நிலையில், ஹெச். ராஜாவின் பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தமா..? ஹெச். ராஜாவின் பேச்சால் அதிரடியாக முடிவெடுத்த கதர்சட்டைகள்!