×
 

டிராகன் பட நடிகையின் அடுத்த படம் காதல் மன்னனுடன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட டிராகன் நடிகையின் அடுத்த படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

நடிகை கயாடு லோஹர், தனது முதல் படத்தை மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் 'அல்லூரி' என்ற படத்தில் நடித்தார். இப்படி கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்து அப்பகுதியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் பெற்ற இவர். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்து, தமிழ்திரையுலக கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். 

பிப்ரவரி 21ம் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல ஹிட் படமாக மாறியுள்ளது. இப்படத்தை குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், தன்னை பல ஹீரோயின்கள் நிராகரித்ததாகவும் அவர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்வதாகவும் கூறினார். மேலும் நான் இந்த டிராகன் படத்திற்கு வரும்பொழுது ஹீரோயின் யார்? என கேட்ட பொழுது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகை கயாடு லோஹர் என்று சொன்னார். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நான் முதலில் நம்ப வில்லை பிறகு தான் நம்பினேன், அதுமட்டுமல்லாமல் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது பிரேமம் படத்தில் அவர்களை பாத்ததாக கூறி, தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்ட கயாடு லோஹர்க்கு நன்றி தெரிவித்தார். 

இதையும் படிங்க: மாஸ்டர் பட போஸ்டரை திருடிய கவின்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு..!

இப்படி இருக்க, நடிகை கயாடு லோஹர்க்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாக தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், தமிழில் தனது அடுத்த படமான 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, ரக்ஷன், பிரக்யா, ஏஞ்சலின் மற்றும் யஷாஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் பரிதாபங்கல் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுதாகர் மற்றும் டிராவிட் மற்றும்  நிஹாரிகா என்.எம் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மத்தியில் வெளியிடப்பட்டன. 

பின்பு பேசிய நடிகர் அதர்வா, ஒரு தலைக் காதல் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தனி அனுபவம். அதை கடந்து வராத ஆண், பெண் இருக்கவே முடியாது.ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் தன் காதலனுக்காக காத்துக் கொண்டிருப்பாள். அதுதான் காதல் என்பர். ஆனால் அதுதான் உண்மை காத்திருப்பது தான் காதல் என்று கூறியிருப்பார்.

இந்த நிலையில், முரளியை நினைவு கோரும் உன்னதமான படைப்பு தான்'இதயம் முரளி' திரைப்படம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ரத்னாவுக்காக ஷண்முகம் எடுத்த சபதம்! வெங்கடேஷ் சிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share