20 வயசுலயே இப்படியா? கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்த அனிகா சுரேந்திரன்!
ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள, நடிகை அனிகா சுரேந்திரன் சேலையில் தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதை வெல்லும் பிரபலங்கள் கூட, வளர்ந்த பின்னர் தங்களை ஹீரோ - ஹீரோயினாக நிலைநிறுத்தி கொள்ள தடுமாறுகிறார்கள்.
ஆனால் சில பிரபலங்களுக்கு அவர்களின் அழகு மட்டும் அல்ல, அதிஷ்டமும் பெரிய அளவில் கைகொடுக்கிறது.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாகி பிரபலமாகி இப்போது ஹீரோயினாகவும் நடிக்க துவங்கி உள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன்.
இதையும் படிங்க: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கிக் ஏற்றும் ஹன்சிகா!
கேரளாவை சேர்ந்த அனிகா, தமிழில் அஜித் - த்ரிஷா நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்த இந்த படத்தில், அஜித் - த்ரிஷாவின் மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில், அஜித் மற்றும் அனிகா இடையே இருந்த அப்பா மகள் உறவு அதிகம் பேசப்பட்டது. எனவே இந்த படத்திற்கு பின்னர் அஜித்தின் ரசிகர்கள் அனிகாவை அஜித்தின் ரீல் மகள் என்றே அழைத்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும், தமிழிலும் நானும் ரவுடி தான், மிருதன், விசுவாசம், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார்.
அனிகா சுரேந்திரன் பார்ப்பதற்கு, நடிகை நயன்தாரா போலவே இருப்பதாக சில ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இவரை குட்டி நயன் என்றும் ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக தன்னை திரையுலகில் அடையாளப்படுத்தி கொண்ட அனிகா இப்போது 20 வயதை எட்டியுள்ளார்.
மேலும் தன்னுடைய வயசுக்கு ஏற்ப, ஹீரோயின் ரோல்களையும் தேர்வு செய்து நடிக்க துவங்கிவிட்டார்.
ஏற்கனவே தெலுங்கில் 'புட்ட பொம்மா', மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தமிழிலும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கவர்ச்சியாக சேலை கட்டி.. நடிகை கிரண் ரத்தோருக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் சில போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.