கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!
கும்பமேளாவில் நடிகை தமன்னாவின் பட டீசர் ரிலீஸ் ஆன நிலையில் எங்க நடிகையின் படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்யவோம் என கூறி உள்ளனர் படக்குழுவினர்.
நடிப்புக்கும் நடனத்திற்கும் பெயர் போனவர் தான் நடிகை தமன்னா பாட்டியா, சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதையான "ஒடேலா 2"வில் தமன்னா நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து, கும்பமேளாவில் நடிகை தமன்னாவின் ஓடேலா 2விற்கான டீசர் வெளியாகி ரசிகர்களை மிரட்டி உள்ளது.
இந்த சூழலில், நடிகைகளில் அறிமுக நடிகைகள், ஏற்கனவே அறிமுகமான நடிகைகள் என பலர் வந்தாலும், ஒருவரை மட்டும் யாராலும் மறக்க முடியாது அவர்தான் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா ஷெட்டி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. அவரது முதல் படமான "சூப்பர்" படப்பிடிப்பின் போது, ஷெட்டியின் உண்மையான பெயர் ஸ்வீட்டி என்பது பார்வையாளர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்று உணர்ந்த, இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் தயாரிப்பாளர் நாகார்ஜுனாவும் ஷெட்டிக்கு அனுஷ்கா ஷெட்டி என திரைப்பெயராக வைத்தனர். இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரையும் அனுஷ்காவாக வலம் வருகிறார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் வெளியானது மந்திரவாதி தமன்னாவின் ஓடேலா 2 டீசர்....! பேய் பிசாசுடன் சுற்றும் கதாநாயகி..!
2009 ஆம் ஆண்டில், அனுஷ்கா நடித்த முதல் கற்பனைத் திரைப்படமான "அருந்ததி" பிளாக்பஸ்டரர் படமாக அமைந்தது. இதனால் தமிழ் மக்கள் மனதில் ஜக்கம்மாவாக நிலைகொண்ட அனுஷ்கா,நாளடைவில் ரஜினி,விஜய்,அஜித்,ஆர்யா முதலானவர்களுடன் பல படங்களை நடித்தார். என்னதான் பல படங்கள் நடித்தாலும், அருந்ததிக்கு பின் ஜக்கம்மா என்ற பெயரை தேவசேனா என மாற்றியது ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம். ஒரு இளவரசி எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார்.
இந்த சூழலில், அனுஷ்கா ஷெட்டி, ஒரு அரிய சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு முறை சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாத நிலையை ஏற்படுத்துவதாகவும்,15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரிப்பை நிறுத்த முடியாத காரணத்தால் படப்பிடிப்பு பல முறை நிறுத்தப்பட்டுள்ளது என அனுஷ்கா கூறியிருந்தார். 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடிக்க உடல் பருமனை ஏற்றிய அனுஷ்காவால் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் மனம் உடைந்த அவர் பின் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்று சிகிச்சை மூலம் எடையை குறைத்து ஒல்லியாக மாறி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது கிரீஸ் இயக்கத்தில் 'காதி' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அனுஷ்கா. கிரைம் திரில்லர் கதையில், ஆந்திரா, ஒடிசா எல்லைப் பகுதியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு கஞ்சா வியாபாரி வேடத்தில் அனுஷ்காவும் துணையாக நடிகர் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 18 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இரண்டு பிரபல தியேட்டர்களில் மார்ச் மாதத்தில் முதல் டிரைலரும், படத்தின் ரிலீஸ்க்கு முன்பு இரண்டாவது டிரைலரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இதனை பார்த்த ரசிகர்கள் கம் பேக் அனுஷ்கா என இணையத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!