மாஸ்க் போட்டுக் கொண்ட கவின்.. வில்லியாக மிரட்டும் ஆண்ட்ரியா...
மாஸ்க் போட்டுக் கொண்ட கவின்.. வில்லியாக மிரட்டும் ஆண்ட்ரியா...
ரஜினி - கமல், அஜீத் - விஜய், தனுஷ் - சிம்பு, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக இளம் நடிகர்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். அந்த வரிசையில் கவின், ப்ரதீப் ரங்கநாதன் ஆகியோரைக் கூறலாம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இடம்பெயர்ந்த கவின் நடித்த லிப்ட், டாடா ஆகிய படங்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து அவர் நடித்த ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன், கவினின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் அமைந்தன. தற்போது கிஸ் என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். அதனை பிரபல நடன இயக்குநர் சதீஷ்குமார் இயக்கி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் நடித்து வருவது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. வெற்றிமாறன் கம்பெனியில் படம் பண்ணுவது என்றால் சாதாரணமா? என எல்லோரும் கவினை வியந்து பார்த்து வருகின்றனர். இதனை விக்ரனன் அசோக் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை எடுத்து வருகிறார். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா இப்படத்தில் நடிக்கிறாராம். வடசென்னை படத்தின் சந்திராவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட ஆண்ட்ரியா இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லாஸ்லியாவை விடாமல் துரத்தும் கவின்..! வேதனையின் உச்சத்தில் நடிகை குமுறல்..!
அக்கட தேசத்தில் பட்டையக் கிளப்பி வரும் ருஹானி சர்மா என்ற சூடான மாடல் தான் இப்படத்தின் கதாநாயகியாம். அவர் பெயரைப் போட்டு எக்ஸ் தளத்தில் தேடினாலே எக்கச்சக்கமான படங்கள் பரவசம் ஊட்டுகின்றன. இதுமட்டுமல்லாது ஜி.வி.பிரகாஷ், இப்படத்திற்கு இசை என்பதால் ஆச்சர்யம் ஒருபடி மேலே போய் நிற்கிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனத்திற்கும், கவினுக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையும் என்கின்றன கோலிவுட் பட்சிகள்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு டைவர்ஸ்..! 37 வருட மனைவியை இழக்கிறார் நடிகர் கோவிந்தா.. 30 வயது நடிகை உடன் தொடர்பு