×
 

உங்களுக்கு இந்தி தவிர வேற என்ன தெரியும்.. எங்கள கட்டாய படுத்த தெரியும்..! இப்ப பிராகாஷ் ராஜ் கிட்ட சிக்குனது யாரு..?

உங்களுக்கு இந்தி தவிர வேறு என்ன தெரியும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் கொந்தளித்து இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

சினிமா போற போக்குல, இருக்குறவங்க எல்லாம் அரசியலுக்கு வராங்க, இல்லைனா அரசியலை பத்தி பேசிட்டு வராங்க. எல்லோருக்கும் பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் இருக்கும் போது, நாமும் எல்லா தப்பையும் தட்டி கேட்டு விடலாமே என சரமாரி கேள்விகளை அரசிடம் பல நடிகர்கள் பேசி கொண்டு தான் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து விஜய் அரசியலில் குதித்தார் என்றால் உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். சீமான்,கமலஹாசன், மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆர்,மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தவர் தான். அரசியல் தெரிந்து கொள்ள அரசியல் ரத்தம் தேவையில்லை அரசியல் பற்றிய சிந்தனை இருந்தால் போதும் எனவும் பல சினிமா பிரபலங்கள் பேசித்தான் வருகின்றனர். 

வடிவேலு சொல்லுற மாறி "இந்த பக்கம் பார்த்தா சோன்னு மழை அந்த பக்கம் பாத்தா சோன்னு மழை" என்பது போல தமிழ்நாட்டில் ஒருபுறம் தில் இருந்தா அறிவாலயம் பக்கம் வாங்க என அண்ணாமலை கூறுவதும் மறுபுறம் துணை முதல்வர் உங்களுக்கு துணிவு இருந்தா அண்ணா சாலை பக்கம் வாங்க என கூறுவதுமாக இருவரும் அஜித் பட டைட்டிலை வைத்து அமர்களப்படுத்தி வருகிறார்கள். படங்கள், டோல்கேட், வாங்குற கார் ஆரம்பித்து பாப்கார்ன் வரைக்கும் மத்திய அரசு வரி விதித்து மக்கள் கொந்தளித்து இருக்கும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை விஜய் தனியார் பள்ளி நடத்தி கொண்டு வருகிறார் என புயலை கிளப்பி,  தமிழ்நாட்டை தாண்டினா சாப்பிடணும் தலைவரே... எப்படி பேசுவீங்க..என்ன பண்ணுவீங்க "இந்தி" தெரியாம என கூறி காட்டுத்தீயை புகைய செய்து இருக்கிறார். இந்த புகை தற்பொழுது சினிமா துறையினர் முதல் கடைகோடி மக்கள் வரை சென்று பூதாகரமாகியுள்ளது.   

இதையும் படிங்க: "என்ன கொடுமை சரவணன்"... மனைவியை குஷிப்படுத்த இப்படி பண்ணலாமா பிரேம்ஜி.. !  

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசு, தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார். இதனால் பல அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள்,இந்திய மாணவர் சங்கம் ஆகியோரும் கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அரசு இந்தி என்று சொன்னால் முதலில் கருத்து கூற ஆவேசமாக வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ், பல பத்திரிக்கைகளிலும் மக்களை சந்திக்கும் இடங்களிலும் தைரியமாக மத்திய அரசை எதிர்த்து வருகிறார். அதுமட்டும் அல்லாமல் "ஜெய் பீம்" படத்தில்  ஹிந்தியில் பேசும் நபரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேச சொல்வார். இது இந்தியா முழுவதும்  அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்பொழுது தனது எக்ஸ் தள பக்கத்தில் "உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..  எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க....ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi #justasking" என்று பதிவிட்டு உள்ளார். இது தற்பொழுது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

அண்ணாமலை கொடுத்த பேட்டிக்கு பதிலடியாக தான் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: காத்திருப்பே வெறி ஏற்றுதே..! அடுத்த டீசருக்கான அப்டேட்.. இதயத்துடிப்பை எகிற வைக்கும் படம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share