×
 

தென்னிந்தியா சினிமா இன்றும் மாறவில்லை.. பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ஜோதிகா ஆவேசம்..!

மகளிர் தினமான இன்று நடிகை ஜோதிகா கூறிய வாழ்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எப்படி தமிழ் பெண்கள் 'நடிகர் சூர்யாவை' போல தான் தங்களுக்கு கணவன் வேண்டும் என்று சொல்கிறார்களோ, அதேபோல், அன்று முதல் இன்று வரை தமிழ் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள இளசுகளிடம், எப்படி பட்ட பெண் வாழ்க்கை துணையாக வேண்டும் என்றால் அனைவரும் கூறுவது ஜோதிகா போன்ற பெண் வேண்டும் என்பது தான். அந்த அளவிற்கு கணவன் மனைவி இருவரும் சிறந்த அழகான ஜோடியா இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். 

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் பல படங்கள் வந்தாலும் அனைத்து படங்களிலும் அழகாக மட்டுமே இருப்பார், ஆனால் முதல்முறையாக கண்களால் பயமுறுத்துவார் என்று ரசிகர்களுக்கு உணர்த்தப்பட்ட படம் என்றால், அது இவர் நடிப்பில் உருவான "சந்திரமுகி" படம் தான். உதாரணத்திற்கு இப்படத்தை பார்த்து விட்டு ஜோதிகாவின் அம்மாவே அவரது அருகில் தூங்க பயந்திருக்கிறார் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும்.

இதையும் படிங்க: இளையதளபதி ஜோடியின் சூப்பர் லுக் போட்டோ.. விருது வாங்க இப்படி ஒரு காஸ்டியுமா..!

"டோலி சஜா கே ரக்னா" என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமானார் நடிகை ஜோதிகா. பின் தமிழில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் "வாலி" படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் இவர் தனது கணவரான சூர்யாவுடன் நடித்த முதல் திரைப்படம் "பூவெல்லாம் கேட்டுப்பார்"., இப்படத்தில் இவர்கள் இருவரது நடிப்பை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இரு வீட்டாரையும் தங்களது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, ஜோதிகா நர்ஸாகவும், சூர்யா ட்ரைவராகவும், இவர்கள் இருவரின் ஆள்மாறாட்ட வேலையை கண்டுபிடிக்க கோவை சரளாவும் போராடும் சிறந்த படமாக இந்த படம் அமைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, பல படங்களில் நடித்த ஜோதிகா, தனது திருமணத்திற்கு பின் தனி கதாயாகியாக ராட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பெண்கள் முன்னேற்றத்திற்கான படங்களில் நடித்து வருகிறார். முற்றிலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதாநாகனும் இல்லாமல் தனி ஸ்டாராய் படத்தில் கலக்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் மும்பையில் குடியேறி உள்ளனர். இதனை அடுத்து தற்பொழுது, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், மகளிர் தினமான இன்று ஜோதிகா தனது கருத்தை கூறி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஜோதிகா கூறுகையில், "மற்ற சினிமாவை போல் தென்னிந்திய சினிமா இல்லை. இங்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளது. பெண்களை சிறப்பு பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாட வைப்பதற்கும், ஆண் நடிகர்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த பழக்கம் இன்றும் இங்கு மாறவில்லை. அதனால் தான், நான் வேறு பாதையை தேடி, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்தேன். பெரும் பாலும் ஹீரோக்கள் உள்ள படங்களுக்கு நோ கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பேண்ட் சொக்காவில் கிளாமர் நடிகை.. அப்ப கிராமத்து அழகி.. இப்ப மாடல் அழகி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share