லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ... கைதி, விக்ரம் படங்களை டீலில் விட்டாரா இயக்குனர்..?
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜன் இயக்கம் என்றால் அதிரடி சண்டை காட்சிகளை வைத்திருப்பார், ஆனால் காதல் என்ற வார்த்தைகளும், ரொமன்ஸ் என்ற வார்த்தைகளும் இவர் படத்தில் சுத்தமாக இருக்காது என்னும் அளவிற்கு தனது இயக்கத்தை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர். அதுமட்டும் அல்லாமல் பிரபலங்ளின் படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்ற பெயரையும் பெற்றவர்.
அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து வீடியோ சாங்கில் நடித்து அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். இப்படி இருக்க, இதுவரை இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில், நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார். அது மட்டுமல்லாது உலகநாயகன் கமல்ஹாசன் மனதை கவரும் அளவிற்கு கதையை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார்.
இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!
மேலும், "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து அசத்தி இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் போதை தடுப்பு மற்றும் கேங்ஸ்டர் பேட்டனை வைத்து இயக்கி வரும் நிலையில், இவர் தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தை நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளும், போஸ்டர்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பானது முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளது என்றும் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி அல்லது தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என்ற தகவல்களும் பரவி வருகிறது.
இந்த நிலையில், கூலி படத்திற்கான அடுத்த அப்டேட் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த போஸ்டரில் அனைவரும் நினைத்தை போல் சிறப்பு நடன காட்சியில் "பூஜா ஹெக்டே" இருப்பதை உறுதிபடுத்தி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என அனைவரும் கூறிவரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை மிகப்பெரிய பிரபல நடிகரை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து வெளியாக தயாராக இருக்கும் கூலி படத்தைத் தொடர்ந்து 'சலாம், சாகோ' போன்ற படங்களிலும், குறிப்பாக பாகுபலி படத்திலும் நடித்து பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரபாஸை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை அறிந்த பல ரசிகர்கள், கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களை தவிர்த்து விட்டு லோகேஷ் கனகராஜ் பல படங்களை இயக்கி வருவது வேதனை அளிப்பதாகவும், இந்தப் படங்களை முடித்துவிட்டு, பிறகு பிரபாஸை வைத்து படம் எடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அகத்தியா மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா ஜீவா..?