பாடல் நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய பெண்..! சற்றும் தயங்காமல் ராகவா லாரன்ஸ் செய்த செயல்...!
பாடல் நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய பெண்ணுக்கு பகிரங்கமாக உதவி செய்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாது இந்திய திரையுலகம் மற்றும் அனைத்து மக்களின் உள்ளங்களிலும் கொடைவள்ளலாகவும், நடிகராகவும், நடன இயக்குநராகவும், இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். பார்க்க ஆள் கருப்பாக இருந்தாலும் கொடுப்பதிலும் நடிப்பதிலும் வெள்ளை உள்ளம் கொண்டவர். அப்படி பட்ட ராகவா லாரன்ஸ் 1993 ஆம் ஆண்டு நடன இயக்குனராக திரையுலகில் தோன்றினார்.
பிறகு நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட லாரன்ஸ், கிடைத்த சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின், 1998 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின் 2004 ஆம் ஆண்டு இயக்குநராக புதிய அவதாரம் எடுத்த லாரன்ஸ், நாகார்ஜுனா மற்றும் ஜோதிகாவை வைத்து 'மாஸ்' என்ற தெலுங்கு திரைபடத்தை இயக்கினார்.
இதையும் படிங்க: குட்டீஸ் தேடிய விஜய் டிவி நடிகை ஷிவாங்கி: நானும் ரௌடிதான் தட்டித்தூக்கியது எப்படி..?
இப்படி இருக்க, தமிழில் 'முனி' என்கின்ற பேய் படத்தை இரண்டாவது முறை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். அதன்பின் காஞ்சனா ஒன்று, இரண்டு, மூன்று எனும் பாகங்களை தனித்தனியாக பிரித்து வித்தியாசமான பேய்களை காண்பித்து தனக்கு என ஒரு அடையாளத்தை கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் உருவாக்கினார். பேய் படங்கள் பார்க்க பயமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில், பேய் படத்தையும் காமெடியாக சித்தரிக்கலாம் என்பதை காண்பித்தவர் தான் நம்ப ராகவா லாரன்ஸ் என மக்களையே பேச வைத்தவர்.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக, கோவை சரளா முதல், பல முன்னணி நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலரும் இடம்பெற்று இருப்பார்கள். அவர்களின் வரிசையில், ராகவா லாரன்ஸ் படத்தில் எப்பொழுதும் சிறப்பு பாடல் ஒன்று இருக்கும். அதில் அவர் தனது பிள்ளைகளாக என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கைவிடப்பட்டவர்களையும், உடல் உறுப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவார்.
இப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ் இதுவரை, பரவசம், பார்த்தாலே பரவசம், அற்புதம், ராஜபூழு, மாஸ், ஸ்டைல், லட்சியம், டான், டான் நம்பர் 1, முனி, பரது, பாண்டி, ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், ஆரவாரம், காஞ்சனா, உயிரெழுத்து, நண்பன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, மொட்டை சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, கால பைரவா, நாகா, காஞ்சனா 3, லக்ஷ்மி, ருத்ரன், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், சந்திரமுகி 2, புல்லர்ட் போன்ற தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.
மேலும், ஹண்டர், பென்ஸ், துர்கா, காஞ்சனா 4, அதிகாரம் போன்ற படங்கள் இன்னும் இவரது நடிப்பில் வரவிருக்கிறது. இதனை தொடர்ந்து, தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10ல் மணிமேகலையின் பழிச்சொல்லுக்கு ஆளான பிரியங்கா தொகுப்பாளினியாக மாகாபா ஆனந்தத்துடன் இணைந்து தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார். அதே போல் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பாடகர் மனோ, சித்ரா மற்றும் டி.இமான் ஆகியோர் இருந்து பாடுகின்ற போட்டியாளர்களுக்கு தங்களது கமெண்ட்ஸை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் "நஸ்ரின்" என்ற பெண் நிகழ்ச்சியின் பொழுது "தனது அம்மாவிற்கு டைலரிங் கடை வைக்க வேண்டும் என்பது தான் எனது கனவு" என கண்ணீர் மல்க கூறிய விஷியம் ராகவா லாரன்ஸ் காதுகளுக்கு சென்றதையடைத்து, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,
நஸ்ரின் அம்மாவிற்கு சொந்தமாக டைலரிங் கடையை வைத்து கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த கடைக்கு "நஸ்ரின் தையல் கடை" என பெயர் வைத்து அசத்தி இருக்கிறார்.
இதே நிகழ்ச்சியில், தனது ஊர் மக்களுக்கு குடிநீர் வசதி வேண்டும் என சிறுவன் சொன்னதற்கு, ஏற்கனவே மினரல் குடி தண்ணீர் வசதியை ராகவா லாரன்ஸ் ஏற்படுத்தி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்யாணம் ஆகி குழந்தை பெற்ற பின்னும் கட்டழகில் மயக்கும் காஜல் அகர்வால்!