×
 

கால்ஷீட் கொடுக்காத ஹீரோயின்.. பின் வந்தவர் தான் தமன்னா.."பையா" இயக்குநர் ஹார்ட் டச் ஸ்பீச்..!

பையா படத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையின் கால் ஷீட் கிடைக்காததால் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் தமன்னா என மனம் திறந்து பேசி இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

தமிழ் திரையுலகில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தமன்னா பாட்டியா.. தமன்னா ரியாக்ஷனுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை போல், அவர் நடனத்திற்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இப்படிப்பட்ட புகழுக்கு சொந்தக்காரியான தமன்னா ஆரம்பத்தில், 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான "இல் சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டு "ஸ்ரீ" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு "கேடி" என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

இதனை தொடர்ந்து தமிழில் சிறுத்தை, பையா, சுறா, படிக்காதவன், தில்லாலங்கடி, தோழா போன்ற படங்களில் நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார். இப்படி இருக்க நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா பாட்டியா இருவரது கெமிஸ்ட்ரி படத்தில் ஒத்து போவதை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிப்பதாக கூற, தமன்னா தற்பொழுது கெரியர்தான் முக்கியம் என கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

இதையும் படிங்க: தமிழில் ஓடாத "ஆயிரத்தில் ஒருவன்" படம் ரீரிலீஸ்... வெளிநாட்டிலும் திரையிடப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

காலம் கடந்தாலும், இன்றளவும் தமன்னாவின் நினைவுகூரும் படம் என்றால் அது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், என். லிங்குசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், தமன்னா பாட்டியா, கார்த்திக், மிலிந்த் சோமன், சோனியா தீப்தி மற்றும் ஜெகன் என பலரது நடிப்பில் 2010 ம் ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த "பையா" படம் தான். கார்த்திக் தமன்னா நடிப்பில் வெளியான "சிறுத்தை" படத்தை தொடர்ந்து வெளியான ஹிட் திரைப்படம் ஆகும். 

பையா என்ற டைட்டிலை பார்த்த உடன் சிறுத்தை போல் திருடன் கதாப்பாத்திரத்தில் தான் கார்த்திக் நடித்திருப்பார் என ரசிகர்கள் நினைக்க, லிங்குசாமி புதுவிதமாக யாரும் எதிர்பாராத வகையில், ஒருதலையாக காதலித்து வரும் தனது காதலியின் ஆசையை நிறைவேற்ற, பெங்களூரில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் செல்வதும் போகும் வழியில் இருவரது பிரச்சனைகளையும் கடந்து கடைசியில், கார்த்திக்  சொல்லாமலேயே தமன்னாவுக்கு கார்த்திக் மேல் காதல் வருவதை போல் இயக்கி இருப்பார். எப்படி சிவாஜி திரைப்படத்தில் இயக்குநர் சங்கர் கார் சண்டை காட்சி வைத்திருப்பாரோ அதே போல் பையா படத்திலும் காரில் சண்டை காட்சிகளை மிகவும் பிரமாதமாகவும் தத்ரூபமாகவும் வைத்திருப்பார் லிங்குசாமி.

இப்படி இன்றும் ரசிகர்களால் போற்றி புகழப்படும் இத்திரைப்படத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமன்னா இல்லை என இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார். படத்தின் கதைகள் எழுதி படமாக்க திட்டமிடும் பொழுதே கார்த்திக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க நினைத்ததாகவும் ஆனால் அப்பொழுது நயன்தாராவின் கால் ஷீட் கிடைக்காததால் தமன்னாவை வைத்து இயக்கியதாவும் தெரிவித்து உள்ளார் இயக்குநர். 

அதுமட்டும் அல்லாமல் பையா படத்தில் நடிக்கும்போது தமன்னாவுக்கு வெறும் 19 வயது தானாம். படப்பிடிப்பு  முழுவதும் பெரும்பாலும் ரோட்டிலேயே நடைபெற்றதால் அந்த இடங்களில் உடை மாற்ற கூட வசதிகள் இல்லை, அதனால் அங்கு நான்கு பேரை சேலையை சுற்றி பிடிக்க சொல்லிவிட்டு தமன்னா உடை மாற்றி கொள்வாராம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமன்னா sincere ஆக நடித்தார். அதனால் தான் இன்றும் உயரத்தில் இருக்கிறார் என இயக்குனர் லிங்குசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

எப்படி இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் படத்தில் நடித்த நடிகை மீனா, ரோடாக இருந்தாலும் நான்கு பேரை சேலையை சுற்றி பிடிக்க சொல்லிவிட்டு உடைகளை மாற்றி நடிக்க வருவாரோ, அதே போல் நடிகை தன்மன்னா பாட்டியாவும் இருந்திருக்கிறார் என்றால் அது தான் உழைப்பு, என பலரும் இந்த பேட்டியை பார்த்து தமன்னாவை பாராட்டி வருகின்றனர். மறுபுறம் இந்த படத்தையும். ரீரிலீஸ் செய்யலாமே என கூறியும் வருகின்றனர்.

இதையும் படிங்க: கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share