ரஜினி பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; அதிர்ச்சியில் திரையுலகம்!
ரஜினி பட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி பட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் அடுத்த பொனாகல் பகுதியைச் சேர்ந்தவர் கே.பி.செளத்ரி, 44 வயதான இவர், திரைத்துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரானார். 2016ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் தெலுங்கு தயாரிப்பாளராக பிரபலமானார். இதையடுத்து “சர்தார் கப்பர்சிங்”, “சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு” ஆகிய படங்களை தயாரித்தார்.
திரையுலகில் கிடைத்த பணம், புகழை அடுத்து கோவாவில் கிளப்பை ஒன்றையும் தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் கடந்த 2023ம் ஆண்டு கோக்கைன் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கால் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சலில் கே.பி.செளத்ரி சிக்கியிருந்ததாக தெரிகிறது. இதனிடையே வடக்கு கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செளத்ரியை, கடந்த சில நாட்களாகவே அவரது நண்பர்கள் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயன்றுள்ளனர். ஆனால் அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மறைந்தார் பழம் பெரும் நடிகை புஷ்பலதா... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்
இதனையடுத்து சியோலிம் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று பார்த்த போலீசார், கே.பி.செளத்ரியின் உடலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்தனர். புகழின் உச்சத்தில் இருந்த இளம் தயாரிப்பாளர் போதை வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டால்பி அட்மாஸ் ஒலியுடன் ரீ-ரிலீஸ் செய்யப்படும் தலைவரின் 'பாட்ஷா'! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!