×
 

விடாமுயற்சிக்கு போட்டியாக களம் இறங்கிய சாய் பல்லவியின் தண்டேல்.. ரசிகர்களின் கவனத்தை பெறுமா?

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், சாய் பல்லவி நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படமும் அதற்குப் போட்டியாக வெளியாகி உள்ளது.

த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது என்றே சொல்லலாம்.

முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அஜித்தின் படம் ஏதும் வெளிவராததால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி திரைப்படம் பெரும் விருந்தாகவே அமைந்தது.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத தொழில்நுட்ப காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ளது. நேற்று இரவு முதலே பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள் கட்ட அவுட்டுக்கு பால் பாலாபிஷேகம் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி வந்தனர்.

இதையும் படிங்க: டிக்கெட் 100 ரூபாய்.. ஆனால் பைன் 1000 ரூபாய்.. படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்..

இது ஒரு புறம் இருக்க நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் தண்டையல் திரைப்படம் ஆனதும் இன்று தான் வெளியாகி உள்ளது. என்னதான் இது தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் இந்த படம் தமிழ் ஹிந்தி புளூட்டோ பல்வேறு மொழிகளிலும் ரிலீசுக்கு தயாராகியது. சந்து மொன்டெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தெலுங்குவில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், தமிழில் ட்ரீ வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி உள்ளது.

அமரன் படத்தை போன்று இந்த படமும் ஒரு உண்மை சம்பவக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். படக்கதை விசாகப்பட்டணத்தில் அருகே உள்ள ஸ்ரீகா குளத்திலிருந்து தொடங்கி குஜராத் சென்று குஜராத்தில் இருந்து பாகிஸ்தான் சென்று அங்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் சிக்கி மீண்டும் தாயகம் திரும்புவதை இந்த படத்தின் கதை அம்சமாகும். 

இந்த படத்தில் சாய் பல்லவியின் கணவராக வரும் நாக சைதன்யா  மீனவராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடலில் மீன் பிடிக்க செல்லும் நாகசைதன்யா  தவறுதலாக பாகிஸ்தான் பார்டர் பக்கம் சென்று அந்நாட்டு ராணுவத்திடம் மாட்டிக்கொள்கிறார். படத்தில் மனைவியாக நடிக்கும் சாய் பல்லவி நாகசைதன்யாவை பாகிஸ்தான் ராணுவத்திடம் மீட்டு தாயகம் திரும்புவதே படம்.

படத்தின் இயக்குனர் உண்மை சம்பவத்தை தழுவி அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகளிடம் பல்வேறு சுவாரசிய விஷயங்களை பெற்று இப்படத்தை எடுத்து இருக்கிறார். என்னதான் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகினும், தமிழகத்தில் அஜித்தின் தண்டேல் சற்று நிலை குலைந்தது என்றே சொல்லலாம். முன்னதாக இந்த படத்திற்கு தமிழகத்தில் சுமார் 100 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிக்கெட் 100 ரூபாய்.. ஆனால் பைன் 1000 ரூபாய்.. படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share