சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி..! சாப்பிட்டவர்கள் கூறிய அந்த வார்த்தை..! இப்படி ஆயிடுச்சே..!
பராசக்தி படத்தில் தன்னுடன் பணிபுரியும் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சாதாரணமா நமக்கே பிறந்த நாள் என்றால் என்னப்பா பிறந்தநாளுக்கு ட்ரீட் இல்லையா என அடம்பிடித்து நண்பர்களிடம் வாங்கி கொள்வது போல, நடிகர் சிவகார்த்திகேயனிடம், என்ன சிவா, பிறந்தநாள் கொண்டாடுறீங்க, வாழ்த்துக்கு நன்றிலாம் சொல்லுறீங்க, ட்ரீட் எங்கப்பா... அட பிரியாணி எங்கப்பா....என உரிமையோடு கேட்டுருப்பாங்க போல சிலர் அதற்காகவே சிவகார்த்திகேயன் இப்படி செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் என்றாலே விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நிச்சல், ரெமோ, டாக்டர், அமரன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்களின் கனவு நாயகனாக இருப்பவர் என்று பேசுபவர்கள் அதிகம்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை சைட் அடித்த ஆர்த்தி... க்யூட் லுக்கில் சிவாவுக்கு வலைவீச்சு...!
சமீபத்தில், தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வந்த நிலையில், அன்று ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான "மதராஸி" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டம் அடைய செய்தது.
இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று "பராசக்தி" படத்தை இயக்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா, தனது எக்ஸ் தளத்தில், 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம், பட உருவாக்க வீடியோவை வெளியிட்டு, அதற்கு கீழ் "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ. சினிமாவைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது அதன் பயணம்தான். அந்த வகையில் உங்களோடு இணைந்து பயணித்து, பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது." என்று நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில், தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த சிவா, பராசக்தி படக்குழுவினருக்கு அதிரடியாக பிறந்த நாள் ட்ரீட் வைத்து உள்ளார். சிக்கன், மட்டன் என இரு பிரியாணிகளையும் தயார் செய்து அனைவருக்கும் பகிர, இயக்குநர் சுதா கொங்கரா என்னங்க சிவா சார் நமக்கு கொஞ்சம் பிரியாணி போடுறது என சொல்ல, உங்களுக்கு இல்லாததா என பிரியாணியை அன்புடன் பரிமாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சுதா கொங்கரா, அவருக்கு மீண்டும் வாழ்த்து கூறி இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பராசக்தி படத்துல அசைவ விருந்தா.. அப்ப இது ஆன்மிக படம் இல்ல போல என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.. 'பராசக்தி' படத் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது.. நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்.!