விஜய் ஒரு ஸ்வீட் ஹார்ட். .!புகழ்ந்து தள்ளிய பாலிவுட் சூப்பர் ஹீரோ
விஜய் ஒரு ஸ்வீட் ஹார்ட். .!புகழ்ந்து தள்ளிய பாலிவுட் சூப்பர் ஹீரோ
பாலிவுட் நடிகர் பாபி டியோல், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்யை “எளிமையான, பணிவான” நபர் என புகழ்ந்தார்.
தமிழ்த் திரைப்படமான “ஜனநாயகன்” படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பாபி, இது விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்றார். விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன் இது அவரது இறுதி பயணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.
ஜெய்ப்பூரில் நடந்த IIFA விருதுகள் 2025 விழாவில் பேசிய பாபி, “தளபதி விஜய் ஒரு இனியவர். மிக எளிமையானவர், பணிவானவர்” என்றார்.
ஹிந்தியில் “அனிமல்” பட நடிகரான பாபி, தமிழில் “கங்குவா”, தெலுங்கில் “டாக்கு மகாராஜ்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். வெவ்வேறு மொழி திரையுலகில் பணியாற்றுவது மொழி மட்டுமே மாற்றுகிறது, பணி முறை ஒரே மாதிரியாக உள்ளது என்றார். “எனக்கு சவாலான, வசதியான பாத்திரங்களுக்கு அப்பாற்பட்ட கதாபாத்திரங்கள் பிடிக்கும்” என்று அவர் கூறினார்.
1995-ல் “பர்ஸாத்” படத்துடன் அறிமுகமான பாபி, சினிமா மூத்த நடிகர் தர்மேந்திராவின் இளைய மகனும், நடிகர் சன்னி டியோலின் தம்பியும் ஆவார். “கடவுள் எனக்கு அருள் புரிந்துள்ளார். 30 ஆண்டுகளாக ரசிகர்கள் என்னை ஆதரிக்கின்றனர். அப்பாவின் அன்பால் இவ்வளவு அன்பு கிடைக்கிறது. விருது வெல்லும்போது அது ரசிகர்களுக்காகத்தான்” என்று நெகிழ்ந்தார்.
IIFA 2025 விருதுகள் ஓடிடி தளங்களில் ஒளிபரப்ப படுவதற்கு பாபி மகிழ்ச்சி தெரிவித்தார்
2020-ல் நெட்ஃபிக்ஸ் படமான “கிளாஸ் ஆஃப் 83” மூலம் ஓடிடியில் அறிமுகமானவர், பின்னர் MX பிளேயரின் “ஆஷ்ரம்” தொடரில் நடித்தார். “ஓடிடி IPL போன்றது. புதிய கிரிக்கெட் வீரர்கள் பல அணிகளில் விளையாடி இறுதியில் இந்திய அணிக்கு வருவது போல” உள்ளது என்று உவமை கூறினார்.
தர்மேந்திரா, சன்னி, பாபி மூவரும் IIFA மேடையில் நடனமாடுவார்களா என்ற கேள்விக்கு, “நம்புகிறேன். ஆனால் அப்பாகக்கு வயதாகி விட்டதால் பலவீனமாகிவிட்டார்” என்றார்.