×
 

அப்ப நடிகை.. இப்ப டைரக்டர்...! கவர்ச்சி நடிகையின் கவர வைக்கும் திரைப்படம்...! சும்மா அதிருதுல்ல..!!

இயக்குநராக களமிறங்கும் டைட்டானிக் ஹீரோயினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

படத்தில் காதல் காட்சிகளை எவ்வளவோ பார்த்திருப்போம்.. ஆனால் தன் உயிரைக் கொடுத்து ஹீரோயினை காப்பாற்றிய 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத ஒரே திரைப்படம்  "டைட்டானிக்". படத்தின் பெயரை கேட்டால்  அனைவரது நினைவில் வருவது ஜேக் மற்றும் ரோஸ்... சில தமிழ் சினிமா காமெடிகளில் கூட ஜாக் ரோஸ் என கலாய்ப்பதும் உண்டு. அந்த அளவிற்கு இந்த படம் இன்றும் ஃபேமஸ். 

இன்று ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களில் கூட அனிமேஷன், வி எஃப் எக்ஸ் வந்த நிலையில், படங்களை பார்க்க அருமையாக இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலத்திலேயே உண்மை கதையை சிறந்த படைப்பாக கொடுக்கப்பட்ட டைட்டானிக் படம் கடலில் எடுக்காமல் தரையில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் நம்ப முடியுமா? பல ஏக்கர் இடத்தில் பிரம்மாண்ட கப்பலின் தோற்றத்தை வடிவமைத்து அதில் பல தொழில்நுட்பங்களை சேர்த்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக கொடுத்திருப்பார் ஜேம்ஸ் கேமரூன்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை சைட் அடித்த ஆர்த்தி... க்யூட் லுக்கில் சிவாவுக்கு வலைவீச்சு...!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ உடன் கேட் வின்ஸ்லெட் இணைந்து நடித்த இந்த படம் 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு பல விருதுகளை தட்டி சென்றதுடன், அப்பொழுதே உலகளாவிய அளவில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்று வசூல் சாதனை படைத்த படம். இப்படத்தில் பணக்காரியான ரோஸ் ஏழையான ஜாக்கை காதலத்து கொண்டிருக்க, சந்தோஷமான வாழ்வில் பூகம்பமாய் பனிப்பாறை மீது கப்பல் மோதி இரண்டாக உடைந்து உடைய, நடுக்கடலில் தத்தளித்தவர்கள் மத்தியில் ரோசை காப்பாற்ற கடலில் தன்னுயிரையே கொடுத்திருப்பார் ஜேக். இப்படிப்பட்ட கதையில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட், இப்படத்திற்குப் பின்பு பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாமல்  தொலைக்காட்சி தொடரிலேயே தனது வாழ்க்கை பயணத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், நடிகையிலிருந்து அடுத்த பரிமாணத்திற்கு மாறுகிறார் கேட் வின்ஸ்லெட். இதயத்தை கவர்ந்த காதல் கதையாக "குட் பை ஜூன்" என பயிரிடப்பட்ட படத்தை இங்கிலாந்தில் இயக்கி வருகிறார் லேட். அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகையாக இருப்பதை காட்டிலும் இயக்குநராக இருப்பது மிகவும் பிடித்திருக்கிறது என்றும் இது பொறுப்புடைய பணியாக கருதுவதாகவும் கூறியிருந்தார். 

இவர் இயக்கும் "குட் பை ஜூன்" திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகையாக இருந்து  தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தொகுப்பாளராகவும் இருந்து இன்று இயக்குநராக மாறியிருக்கும் கேட் வின்ஸ்லெட்டின் படம் வெற்றி அடைய வாழ்த்தி அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதலில் ஜோதிகா... இப்போ நயன்தாரா...! மும்பையில் இந்த ஹீரோயினா...!!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share