2024 ஸ்கோர் செய்தது யார்? விஜய்? ரஜினி? விஜய் சேதுபதி? சிவகார்த்திகேயன்?
விஜய் சேதுபதியை சுற்றியே தமிழ் திரையுலகமும், தமிழ் மக்களும் இயங்கும் ஆண்டாக கடந்த ஆண்டு இருந்துள்ளது என்று சொல்லலாம்.
2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்டவர்கள், சாதித்தவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் பெரும்பான்மையான இளைஞர்களால் குடும்ப தலைவிகளால் குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்படுபவர்கள் கள் திரைக்கலைஞர்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என தொடர்ந்து திரைகலைஞர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் விரும்பப்படும் நபராக இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் பொழுதும் திரைத்துறையில் நடிகர்களுடைய திரைப்படங்கள் எத்தனை வருகிறது என்பதை அவரவர் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.
கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை எனலாம். எப்போதும் வெற்றிப்பாதையில் பயணிப்பவர் அந்தப் பாதையில் இன்னொரு மைல்கல்லாக வேட்டையன் படம் பேசப்பட்டது. ஆனால் லால்சலாம் பெரிய மாற்றத்தை கொடுக்கவில்லை. அதைத் தாண்டி பெரிதாக ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய விஷயங்கள் என்று பார்த்தால் எதுவும் இல்லை என்று சொல்லலாம். காரணம் வெற்றியை எப்போதும் ருசித்துப் பார்ப்பவர் புதிதாக ஒரு மெகா வெற்றி அல்லது மிகப்பெரிய அளவில் பேசப்படும் ஒரு படத்தை கொடுத்தால் அது அவருக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஒன்று என்று சொல்லலாம் ஆனால் வழக்கமான அவருடைய பாணியில் ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம், ஆகவே இந்த போட்டியில் இருந்து ரஜினிகாந்த் விலகிக் கொள்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி சொல்லும் கெட்டவன் யார்? புத்தாண்டில் பொடி வைத்து பேசிய ரஜினி...
கமல்ஹாசன் பல ஆண்டுகளாக நடித்து வெளியான இந்தியன் 2 படம் பற்றியும், திமுகவிடம் அவர் அரசியல் ரீதியாக சரணடைந்ததையும் வைத்து ஒன்றும் சொல்வதற்கில்லை. சூர்யாவின் கங்குவாவின் இரைச்சலால் அவரும் பேசப்படவில்லை. கார்த்தியின் மெய்யழகன் படத்துக்கு யார் ஹீரோ என்கிற போட்டி காரணமாக அவரும் பெரிதாக சாதிக்கவில்லை.
அடுத்து நடிகர் அஜித் கடந்த ஆண்டு எந்த படமும் கொடுக்கவில்லை. அவரது பாணியில் கார் ரேஸ், இடையில் விடாமுயற்சி என அவரும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அடுத்து மிகப்பெரிய நடிகர் விஜய். இவரும் ரஜினிகாந்த் போல் கமர்ஷியல் படங்கள், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கொடுத்து பெரிய ஹிட் அடிப்பவர். சேதுபதி என்று சொல்லலாம் நடிகர் விஜய்யின் படங்களும் ரஜினிகாந்த் நடித்த படங்களை போன்று கமர்சியல் ஹிட் கொடுக்கும் படங்களை அந்த வகையில் 2023-ல் 2 ஹிட் படங்களை கொடுத்த அவர் அரசியலுக்கு வருவதால் படங்களை முடித்துக்கொள்ள போவதாக அறிவித்த நிலையில் அவருடைய ‘கோட்’ திரைப்படம் தனது கடைசி படத்துக்கு முந்தைய படம் என்ற நிலையில் கடந்த ஆண்டு வெளியானது. படத்தைப்பற்றி வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தை மீறி வெற்றிபடமாக அமைந்தது.
அரசியலில் கால் பதிக்கும் அறிவிப்பை வெளியிட்டு கட்சி பெயர் கொடி அறிவித்து மாநாடும் நடடததியதில் கடந்த ண்டு விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டாக சொல்லலாம். ஆனாலும் திரை வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2025 இருக்கலாம் என்கிற நிலையில் அவர் இரண்டாம் இடத்தை பெறுகிறார்.
அடுத்து வருபவர் விஜய்யால் அடுத்த விஜய் என அடையாளம் காட்டப்பட்டவர் என்று சொல்லப்படும் சிவகார்த்திகேயன். அதற்கு ஏராளமான ஆக்ஷன் ஹிட் படங்கள் கொடுக்கணும் பார்ப்போம். அவரது நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் வெற்றிப்படமாக பேசப்படுகிறது. இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான அயலான் சரியாக போகவில்லை. ஆனால் மேஜர் முகுந்த் வாழ்க்கை கதையில் ’அமரன்’ படம் மூலம் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக அமரன் அமைந்துள்ளது எனலாம்.
அடுத்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒரு நடிகராக எந்த ஆரவாரத்திலும் சிக்காமல், எதிலும் தலையிடாமல் நடிப்பு தொழில் ஒன்றை மட்டுமே கவனித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார் என்பதை கடந்த ஆண்டு வெளிவந்த அவரது இரண்டு திரைப்படங்களும் உணர்த்தியுள்ளன.
விஜய் சேதுபதிக்கு கடந்த ஆண்டு அவரது வாழ்க்கையில் திருப்புமுனை தரும் மூன்று சம்பவங்கள் நடந்தது ஒன்று அவர் நடித்து வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேறு எந்த நடிகர்களுக்கும் கிடைக்காத மிகப்பெரிய பெருமையாக சீனாவில் 40 ஆயிரம் ஸ்கிரீனில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எந்த நடிகருக்கும் கிடைக்காது ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் என்று சொல்லலாம்.
அநேகமாக சிறந்த நடிகருக்கான போட்டியில் அமரனும், மஹாராஜாவும் போட்டியிட வாய்ப்புண்டு எனலாம். அதற்கு அடுத்து அவர் சாதனைகளின் நாயகர் வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விடுதலை பாகம் 1 2023 வெளியாகி சிறப்பாக ஓடிய நிலையில் விடுதலை பாகம் 2 இந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான கமர்சியல் படமாக இல்லாமல் ஒவ்வொரு நடிகருக்கும் வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஐகான் படம் போல் விஜய் சேதுபதிக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு ஐகானிக் மூவியாக விடுதலை பாகம் 1,2 உள்ளது.
அதிலும் பாகம் இரண்டில் முழுக்க முழுக்க தோழராக விஜய் சேதுபதி வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். மஹாராஜா மூவி போல் விஜய் சேதுபதியின் இன்னொரு பரிமாணமாக விடுதலை 2 உள்ளது. அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரும் பிரபலம் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அடுத்தடுத்த பணிகள் காரணமாக அவர் விலகிய நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வழி நடத்தும் மிகப்பெரிய பொறுப்பை விஜய் சேதுபதி ஏற்று சிறப்பாக நடத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியை சுற்றியே தமிழ் திரையுலகமும், தமிழ் மக்களும் இயங்கும் ஆண்டாக கடந்த ஆண்டு இருந்துள்ளது என்று சொல்லலாம்.
ரஜினிகாந்த் வழக்கமான வெற்றியை சுவைத்த நிலையில் நடிகர் விஜய் அரசியல் ரீதியாக அறிவிப்பு வெளியிட்டு வழக்கமான கமர்ஷியல் படத்தை கொடுத்த நிலையில், கமல், அஜித்துக்கு படம் வராத நிலையில், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட மற்றவர்கள் சோபிக்காத நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் என்கிற ஒரு படத்தை மட்டும் கொடுத்த நிலையில் மஹாராஜா, விடுதலை-2 , பிக்பாஸ் என பேசப்படும் நடிகராக விஜய் சேதுபதியே கடந்த ஆண்டு சாதித்தார் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?