தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவிலான ஒரு பிரச்சனையை கையில் எடுத்து, பல்வேறு கட்சித் தலைவர்களை கூட்டி ஒரு கூட்டத்தை இன்றைய தினம் சென்னையில் நடத்தவுள்ளார். தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமானது இன்றைய தினம் சென்னையில் இந்த ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று அவர்களுக்கு கடந்த வாரம் முழுவதும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் முதல்வரின் அழைப்பை ஏற்று அனைத்து அதாவது தமிழ்நாடு அரசு அழைத்த அனைவரும் இந்த நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். கேரளா முதல்வர் பினராய் விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதைத் தவிர்த்து கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மூன்று மொழிகள் படிக்கக் கூடாது.. மூன்று வேளையும் சாராயம் குடிக்கலாம்.. திமுக அரசை போட்டுதாக்கிய வாசன்!!
கூட்டத்தில் பங்கேற்கப்போவது யார், யார்?
கேரளாவிலிருந்து முதலமைச்சர் பினராய் விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினாய் விஸ்வம், காங்கிரஸ் கட்சியின் கம்பக்குடி சுதாகரன், கேரள காங்கிரஸ் கட்சியின் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் மணி கட்சியின் ஜோஸ் கே மணி, முஸ்லிம் லீக்கின் பிஎம்ஏ சலாம், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் என்.என்.கே பிரேமசந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கர்நாடகாவிலிருந்து துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.பொன்னண்ணா ஆகியோரும், ஆந்தராவிலிருந்துருந்து ஒய்ஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியின் உதய் சீரீனிவாஸ் ஆகியோரும் கூட்டத்திற்கு வருகை தருகின்றனர். தெலங்கானாவிலிருந்து முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குண்ட், பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் கே டி.டி ராமராவ், பி வினோத்குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஈத்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஒடிசாவிலிருந்து பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய குமார் தாஸ், அமர் பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் பக்த சரண்தாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலத்தில் இருந்து முதலமைச்சர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் சிரோமணி, அகாளிதளம் கட்சியின் தல்ஜித் சிங் சீமா மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் முதலே பல்வேறு அரசு கட்சித் தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினார். முதன்முதலாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தான் சென்னைக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பஞ்சாப் முதல்வர் மற்றும் தெலுங்கானா முதல்வர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்னை வந்தடைந்தனர்.

சரியாக 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டமானது தொடங்கவுள்ளது. சுமார் 2 மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்காக ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலின் நுழைவாய் “ஃபேர் டிலிமிடேஷன் ஃபர்ஸ்ட் ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி மீட்டிங்” என்று அந்த ஒரு பதாகை வைக்கப்பட்டுள்ளது அது கூற வேண்டுமென்றால் ஃபேர் என்பது ஒரு நியாயமான தொகுதி மறுவரியை என்பதை வலியுறுத்தும் வகையில் ஃபேர் டிலிமிடேஷன் என்பதை ஒரு வலியுறுத்தும் வண்ணம் ஒரு பதாகையானது,
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையால் வட இந்தியாவுக்கு மட்டும் சாதகமா.? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி!