நடிகர் கமல்ஹாசன் தனது சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திற்கே ஜனாதிபதியிடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான உயரிய விருதை பெற்ற கமல்ஹாசன், அதன் பிறகு பல மொழி திரைப்படங்களில் நடித்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் கதை, வசனம், திரைக்கதை எழுதுவது, படங்களை இயக்குவது, தயாரிப்பது, திரைப்படங்களில் பாடுவது என சினிமாவின் அனைத்து துறைகளிலும் திறமைமிக்கவர். இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களை அன்றே கமல்ஹாசன் தனது படங்களில் பயன்படுத்தியுள்ளார்.

1995-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குருதிப்புனல்' படத்தில் முதன் முதலாக இந்திய அளவில் dolby atmos sound தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். அது மட்டுமில்லாது படத்தொகுப்பில் இன்று வரை பயன்படுத்தப்படும் avid சாஃப்ட்வேட் செயலியை முதன்முதலில் 1994இல் தனது 'மகாநதி' படத்தில் பயன்படுத்தியிருந்தார். அதேபோல் இன்று திரைக்கதை எழுத பல சாஃப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முதன்முதலாக 'தேவர் மகன்' படத்திற்காக சாஃப்ட்வேர் மூலம் திரைக்கதை எழுதினார். 2001இல் வெளியான 'ஆளவந்தான்' அமைந்தது.
இதையும் படிங்க: தலைவர் பொறுப்பை ஏற்ற கமல்ஹாசன்..! பிக்கி மாநாட்டில் நடந்த சுவாரஸ்யம்..!

அப்படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்திய அனிமேஷன் தொழில்நுட்பத்தை பார்த்து, பிரபல ஹாலிவுட் இயக்குநர் டெரண்டினோ தான் இயக்கிய 'கில் பில்' படத்தில் பயன்படுத்தியதாக கூறியுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்தார். இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே விஜய் நடித்து வெளியான கோட் படத்ல் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதனை பயன்படுத்தி விஜயை மிகவும் சிறிய வயதாக இருப்பது போல் காட்டப்பட்டது.

இதனால் AI பக்கம் திரும்பிய கமலின் அர்வம் அந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்கு அவரை தூண்டியது, அதன் விளைவாக அவர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றார். இந்த நிலையில், லாஸ் வேகஸில் சினிமா தொடர்பான ஒரு கண்காட்சி நடைபெற்றது. நேப்ஷோ எனப்படும் அந்த கண்காட்சிக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: தக் லைஃப் குறித்த அட்டகாச அப்டேட்.. பர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா..?