நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ராம்கோபால்பேட்டை போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். புஷ்பா படம் பார்க்க வந்து தாய் ரேவதி இறந்த நிலையில் படுகாயமடைந்து ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜ்ஜை பார்க்க செல்வதாக அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டுருந்தார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என்று போலீசார் வழங்கிய நோட்டீஸ் வழங்கினர்.

அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜை காண வந்தால் அங்கு சிகிச்சை பெறுன் நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நீங்கள் செல்ல விரும்பினால் காவல் நிலையத்திற்கும், மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தெரிவித்தால் வந்து செல்லும் வழித்தடத்தை ரகசியமாக வைத்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.
இதையும் படிங்க: அடங்காத சர்ச்சை... அடுத்தடுத்து வைக்கப்படும் குறி... அல்லு அர்ஜுன் செய்த தவறு என்ன..?

போலீசார் நோட்டீஸ் கொண்டு சென்றபோது அல்லு அர்ஜுன் வீட்டில் தூங்கி கொண்டுருந்ததால் அவரது மேலாளர் மூர்த்திக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்து சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய ஜாமினில் உள்ள நிபந்தனையில் உள்ளது. எனவே சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று சென்று கையெழுத்திட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இனி காவல் நிலையம் சென்று கையெழுத்திட உள்ளார்.
இதையும் படிங்க: 'கை, கால், கிட்னி ஏதாவது போச்சா..?' ஒரே நாளில் சிதைத்து விட்ட முதல்வர்..! கொன்னுட்டீங்களே சார்... அல்லு அர்ஜூன் வேதனை