×
 

ரெண்டு பேருமே இதுக்காகத் தான் பண்றாங்க... விஜய், அஜித்தை ஒரே வார்த்தையில் காலி செய்த பார்த்திபன்! 

ரசிகர்களுக்கு விஜய், அஜித் இருவருமே அட்வைஸ் செய்வது விளம்பர தந்திரம் தான் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களுக்கு விஜய், அஜித் இருவருமே அட்வைஸ் செய்வது விளம்பர தந்திரம் தான் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

பாண்டிச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபனிடம், “விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அவர் சாட்டையுடன் இருக்கும் போஸ்டரைப் பார்த்து அவரது ரசிகர்கள் விஜய்யை திமுகவை எதிர்க்க வரும் அடுத்த எம்.ஜி.ஆர். எனக்கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பார்த்திபன்,  “நாம் எப்போதுமே ஏதாவது ஒரு முன்னூதாரணத்தை வைத்துக் கொண்டால் தான் அதற்கு அடுத்த கட்டத்தையாவது எட்ட முடியும். ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த புதிதில் சிவாஜி அளவுக்கு நடிக்க வேண்டும் என நினைத்தால் தான் ஜெய்சங்கர் அளவிற்கு நடிக்க முடியும் எனக்கூறியிருக்கிறார். இப்படி சொல்லியிருக்கக்கூடாதுன்னு ரஜினியே பின்னாட்களில் வருத்தப்பட்டிருக்காரு. அந்த மாதிரி அவங்களும் எம்.ஜி.ஆரை நினைச்சிக்கிட்டு அந்த இடத்த அடைய முடியுன்னு விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த போஸ்டர்ஸ் எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு. மூர் மார்க்கெட்டில் இருந்து அதே சவுக்கு வாங்கிட்டு வந்திருப்பாங்க போல என தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

விஜய் மாநாட்டுக்கு  தங்களோட வேலையை விட்டுட்டு ரசிகர்கள் வரணும் கோரிக்கை வச்சாரு, ஆனா அஜித் வந்து ஒரு பேட்டியில் முதலில் உங்க குடும்பத்தை பாருங்க நீங்க குடும்பத்தை முன்னேற்றுங்கன்னு சொல்லுறாரு. இந்த இரண்டு  நீங்க எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எனக்கு தெரிஞ்சு ரெண்டுமே ஸ்டன்ட் தான் என்னுடைய ஃபீலிங். ரெண்டுமே விளம்பர யுக்தின்னு ஏன் சொல்கிறேன் என்றால், நீங்க வந்து உங்க குடும்பத்தை பாருங்கன்னு ஏன் சொல்றாருன்னா  குடும்பத்தை பார்க்காம இவரை பார்க்க ரெடியா இருக்குற கூட்டத்துக்கு இதை சொல்றாரு.  குடும்பத்தை எல்லாம் தாண்டி அஜித் என்றால் அவரை கடவுளேன்னு பாக்குறவங்களுக்கு முன்னாடிதான் அவர் சொல்றாரு. இவர் சொன்னா அவங்க கேட்டுற மாட்டாங்க. ஆனா அவர் சொல்றது சரியான ஒரு விஷயம். உங்க குடும்பத்தை பாருங்கன்னு சொல்றது சரியான  விஷயம். ஆனா விஜய் அவங்க கூட்டத்துக்கு வந்து நீங்க வேலையை கூட ரிசைன் பண்ணிட்டு வாங்கன்னு  அவங்க கட்சியோட பேச்சு. இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான போக்கை கடைபிடிக்கிறாங்க என்றார். 

இதையும் படிங்க: கோட்-2ம் பாகம் உறுதி... அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகும் தீர்மானத்திற்கு தீ வைத்த விஜய்..!

சீமான் வந்து தொடர்ச்சியா பெரியார் சொல்லிட்டு இருக்காரு நீங்க எப்படி பாக்குறீங்க என்ற கேள்விக்கு, “பெரியாரை நீக்கிட்டு இங்க அரசியல்னு ஒன்னு இல்ல.  அதனாலதான் அவரும் பெரியாரை வச்சிட்டு தான் அந்த அரசியல் பண்றாரு .அது பிளஸ்ஸா மைனஸாங்குறது வேற விஷயம். இப்பவும் நம்ம அரசியல் பண்றதுக்கு பெரியார் தேவைப்படுறாரு. அப்ப அவர் எவ்வளவு பெரிய பெரியார்” என்றார். 
 

இதையும் படிங்க: இது தளபதி பொங்கல்.... "ரூட்" க்ளியர் ஆகிடுச்சு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share