×
 

தண்ணீர் கேட்ட சிறுவன்.. 10 லட்சம் செலவு செய்த ராகவா லாரன்ஸ்... ஊரே கையெடுத்துக் கும்பிட வைத்த ஒரு நொடி செயல்...!

தண்ணீர் கொடுங்கள் என்று கேட்ட சிறுவனுக்காக 10 லட்சத்தை செலவு செய்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

90s காலத்தில் தமிழ் திரையுலகில் நடிகர் ராகவா லாரன்ஸ் என்றால் யாருக்கும் தெரியாது. அவர் நடித்திருக்கும் படங்களும் பெரிதாக ஓடியதும் கிடையாது. இப்படி இருக்க மனவேதனையில் இருந்த ராகவா லாரன்ஸ், மீண்டும் தனது கடின உழைப்பால் 'முனி' என்கின்ற பேய் படத்தை ஆரம்பித்து வெற்றி கண்டார். அதன்பின் காஞ்சனா ஒன்று, இரண்டு, மூன்று எனும் பாகங்களை தனித்தனியாக பிரித்து வித்தியாசமான பேய்களை காண்பித்து தனக்கு என ஒரு அடையாளத்தை தமிழ் திரையுலகில் பெற்று உள்ளார். பேய் படங்கள் பார்க்க பயமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில், பேய் படத்தையும் காமெடியாக சித்தரிக்கலாம் என்பதை காண்பித்தவர் தான் ராகவா லாரன்ஸ். 

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக கோவை சரளா முதல் பல நடிகர்களும், சின்னத்திரை நடிகர்கள் என பலரும் இருப்பார்கள். அவர்களின் வரிசையில் எப்பொழுதும் ராகவா லாரன்ஸ் படத்தில் சிறப்பு பாடல் ஒன்று இருக்கும். அதில் அவர் தனது பிள்ளைகளாக என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கைவிடப்பட்டவர்களையும், உடல் உறுப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும்  வாய்ப்பளித்து அவர்களது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க: ஓ இது தான் விஷயமா...வெளியானது சூர்யாவின் அடுத்த படத்திற்கான சீக்ரட்..!

இப்படி இருக்க பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடியனாக வந்து, தன் கையில் இருக்கும் சிறு தொகைகளை வைத்து தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து வருபவர் தான் நடிகர் பாலா, இதுவரை,அவர் கொடுத்த ஆம்புலன்ஸ்கள் பலரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. இவர் பிறருக்கு செய்யும் உதவிகளை அறிந்த ராகவா லாரன்ஸ், எப்பொழுது உதவி வேண்டுமானாலும் தன்னிடமும் கேளுங்கள் என்று பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்கமாக கூறினார். இதனை அடுத்து ராகவா லாரன்ஸும் பாலாவும் இணைந்து, பலருக்கு வீடு கட்டி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, கணினி வாங்கி கொடுப்பது, வீல் சேர் வாங்கிக் கொடுப்பது என தங்களால் முடிந்த அதிக உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் குருக்கலையாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன், "எங்கள் ஊரில் உள்ள மக்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லை, சுகாதாரமான குடிநீரும் இல்லை அதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்து தாருங்கள் என்று நிகழ்ச்சி வாயிலாக கோரிக்கை விடுத்தார். இந்த காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தனது சொந்த செலவில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை குருக்கலையாப்பட்டி கிராமத்திற்கு பரிசாக வழங்கினார். பின்னர் அதே குடிநீரில் சமைத்த உணவை அவர் சாப்பிட்டும் மகிழ்ந்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், எனது சொந்த பணத்தில் என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும், காஞ்சனா 4வது பாகம் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா அவருடைய பட்டங்களை வேண்டாம் என்று சொல்லுவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் நடிகர் விஜய் தனக்கு நண்பர் என்பதால் அவர் அரசியலுக்கு வந்ததும் தனக்கு சந்தோஷம் என்றும் கூறி அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்ட வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share