×
 

ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது... விமர்சனத்தை சந்தித்த விழாவில் நயன்தாரா எடுத்த போட்டோஸ்!

நடிகை நயன்தாரா சமீபத்தில், மதுரையில் நடந்த பெமி 9 நிறுவனத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். தற்போது இந்த நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுளளார்.

நயன்தாரா மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், வாய்ப்பையும் - வெற்றியையும் கொடுத்தது தமிழ் மொழி படங்கள் தான்.
 

தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்த இவர், சில நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பின்னர் தன்னை வைத்து 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தமிழ் நாட்டு மருமகளாகவே மாறிவிட்டார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் அரைகுறை உடையோடு குடும்பத்தோடு கும்மாளம் போடும் நயன்தாரா!

திருமணம் ஆன 4 மாதத்தில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன் - விக்கி ஜோடி... அவர்ளுக்கு உயிர் -உலகம் என பெயர் வைத்துள்ளனர்.

நடிகை என்பதை தாண்டி, பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள இவர்... கடந்த ஆண்டு பெமி 9 என்கிற நாப்கின் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் முதலாம் ஆண்டு வெற்றிவிழா மதுரையில் நடந்தது. இதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருமே கலந்து கொண்ட நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், முகவர்கள், உள்ளிட்டபலருக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா வந்த போது அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதே போல் பலர் நயன்தாராவை வரவேற்கும் விதத்தில் கை கொடுத்த நிலையில், நயன்தாரா ஒருவருக்கு கூட கை கொடுக்கவில்லை.

அதே போல் அவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் பலர் கைகொடுத்த போதும் நயன்தாரா கை கொடுக்காமல் தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது. இந்த விஷயம் சில மீடியாக்களில் வெளியாக... நெட்டிசன்கள் விமர்சிக்கவும் தொடங்கினர்.

ஒருவரின் உழைப்பை பெற்று... வளர்ச்சியை அடையும் நீங்கள், உங்கள் தொழிலாளிகளை தொட கூட மாடீர்களோ? என பொளந்து கட்டினார்.

இவற்றை கண்டுகொள்ளாத நயன்தாரா, தற்போது அந்த விழாவில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் அரைகுறை உடையோடு குடும்பத்தோடு கும்மாளம் போடும் நயன்தாரா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share