×
 

மன்னிப்பு கேட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்த டிராகன் இயக்குநர்.. நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது அஷ்வத்..!

டிராகன் படம் வெளியாகி பலரது பாராட்டை பெற்று வரும் நிலையில் இயக்குநர் அஷ்வத் தற்பொழுது மன்னிப்பு கேட்டு உள்ளார்.

விஜய் என்று அரசியலுக்கு செல்வதாக கூறினாரோ அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களின் வருகை குறைந்து போனது. பல தியேட்டரின் உரிமையாளர்களும் விஜயை சந்தித்து ஆலோசித்தும் வந்தனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் அடுத்த கதாநாயகனாக இனி சிவகார்த்திகேயன் தான், என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் கவின், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பல நடிகர்கள் தாங்களும் உள்ளோம் என காண்பித்து வருகின்றனர். 

இந்த சூழலில் நடிகர்கள் ஆவதும் அவர்களை வைத்து படம் எடுக்கும் இயக்குநர் ஆவது, என்பதும் சாதாரண விஷயம் அல்ல, நீண்ட வருட உழைப்பு வேண்டும் அதற்கு உதாரணம் தான் நடிகர் சூரி, விமல், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவின், பிரதீப், நெல்சன் திலீப் குமார், லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலரும்.

இதையும் படிங்க: இக்கட்டான சூழ்நிலையிலும் இயக்குநர் சங்கர் போட்ட உருக்கமான பதிவு..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

இப்படி இருக்க சிவகார்த்திகேயனை போல் பலரது அழுத்தத்தில் சிக்கி அழுது புலம்பி இன்று இயக்குநர் மற்றும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரை வைத்து AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம்  தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் தியேட்டர்களில் சக்க போடு போட்டு வரும் வெற்றி படம் தான் டிராகன்.

இப்படத்தை பார்த்த பல முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் படம் குறித்து கருத்துக்களை அள்ளித் தெளித்து  வருகின்றனர். இந்த நிலையில் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் நிறுவனர், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் அடுத்த படம் வெளியாகும் என அப்டேட் கொடுத்து உள்ளார். தொடர்ந்து இரண்டு படங்களை கையில் வைத்திருக்கும் அஸ்வின், அடுத்த படமாக சிம்புவை வைத்து தான் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதனால் "காட் ஆஃப் லவ்" படத்தை குறித்து சிம்புவிடம் அஷ்வின் பேசிவருவதாக கூறப்படுகிறது. தன் கடின உழைப்பால் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து. இன்று லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்கள் மத்தியில் இவரது பெயரும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தை பார்த்த இயக்குநர் சங்கரும், தனது எக்ஸ் தளத்தில், "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இது போன்ற ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு ஹாட்ஸ் ஆஃப். படத்தில் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருந்தனர்.படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

பல சினிமா ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், தனது தாய் மற்றும் தந்தை உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், "நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, எனது  பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் தற்பொழுது பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க மருத்துவராக ஜெயிக்காமல் இருந்திருக்கலாம், என்ஜினியராக ஜெயிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நல்ல இயக்குநராகவும், எங்கள் மனதையும் கொள்ளையிட்டும்  ஜெயித்து விட்டிர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கால்ஷீட் கொடுக்காத ஹீரோயின்.. பின் வந்தவர் தான் தமன்னா.."பையா" இயக்குநர் ஹார்ட் டச் ஸ்பீச்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share