நடிகை ஸ்வரா பாஸ்கர் X சமூக வலைத்தள பக்கம் முடக்கம்
பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்
பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரின் எக்ஸ் (X) சமூக வலைதள பக்கம் பதிப்புரிமையை மீறியதாக முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று சில "கிரீன் ஷாட்"டுகளை அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகை ஸ்வரா பகிர்ந்து இருந்தார்.
"அது அபத்தமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அதற்கு தலைப்பிட்டு இருந்தார்.
அத்துடன் "மகாத்மா காந்திஜி நாங்கள் வெட்கப்படுகிறோம்: உங்கள் கொலையாளிகள் இன்னும் உயிருடன் உள்ளனர்" என்றும் ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டு இருந்தார். மற்றொன்று குடியரசு தினத்தன்று தனது சொந்தக் குழந்தை இந்திய கொடியை அசைத்து குழந்தையின் முகத்தை மறைத்துக் கொண்ட புகைப்படம்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் 3- வது திருமணம்: பாகிஸ்தான் நடிகரை கரம் பிடிக்கிறார்! சுவிட்சர்லாந்தில் தேன்நிலவு!
நடிகை ஸ்வரா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மகளுடன் ஒரு திருமண விழாவில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அந்த சிறுமி ராபியா தனது தாயின் ஒப்பனை, மருதாணி மற்றும் ஊதுகுழல் போன்றவற்றை ரசிப்பதாக அமைந்திருந்தது.
ராபியா இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற லெஹங்கா சோலி ஆடையில், வசீகரமாக தெரிந்தார். ஸ்வரா, பச்ட்டேல் பிங்க் நிற லெஹங்காவில் ஜொலித்தார். இந்த பதிவுக்கு "ராபு டச் அப் மம்மாவின் ப்ளோ டிரை" என்று அவர் தலைப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை சுட்டிக்காட்டி அவருடைய இந்த சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
"இவை எவ்வாறு பதிப்புரிமை மீறலாகும்?" என்று கேள்வி எழுப்பிய அவருடைய கணவர், வெகுஜன அறிக்கைகள் அவருடைய (ஸ்வரா) இடைநீக்கத்திற்கு வழிவகை செதிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: போதைக் கடத்தல் ராணி… கவர்ச்சி நடிகையின் துறவி நாடகம்… மம்தா குல்கர்னி மகாமண்டலேஷ்வரர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்..!