×
 

சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், விஜயசாந்தி: மனம் கவர்ந்த 3 'ஹீரோயின்'கள் பற்றி 'தெலுங்கு சூப்பர் ஸ்டார்' பாலகிருஷ்ணா! 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா பல்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்து சாதனை படைத்தவர். "உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?" என்று கேட்டால், பெரும்பாலான நாயகர்கள் "எல்லா நாயகிகளையும் தான் எனக்கு பிடிக்கும்" என்று நழுவலாக பதில் சொல்லி தப்பி விடுவார்கள்.

ஆனால், நடிகர் பாலகிருஷ்ணா அப்படியல்ல; தான் அதிகமாக ரசித்த நாயகிகளின் பெயரை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விஜயசாந்தி. இவர்களுடைய கூட்டணி ஒரு காலத்தில் தெலுங்கு திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு அவர்கள் இடையே 'கெமிஸ்ட்ரி' ஆழமாக பொருந்தி போயிருந்தது. 

விஜயசாந்தியைத் தொடர்ந்து, தன் மனம் கவர்ந்த மற்றொரு நாயகி ரம்யா கிருஷ்ணன் என்று கூறினார் பாலகிருஷ்ணா. இவர்களுடைய ஜோடியும் பல படங்களில் வெற்றிகரமாக அமைந்தது. 

இதையும் படிங்க: உள்ளாடை தெரிய.. ஓவர் கோட் போட்டு வெட்டிங் பார்ட்டியில் கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ்!

அடுத்து மூன்றாவது இடம் பிடித்தவர், நடிகை சிம்ரன். அவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகில் மாயாஜாலம் (மேஜிக்) செய்தனர் என்று கூட குறிப்பிடலாம். குறிப்பாக சமர சிம்மா ரெட்டி போன்ற 'பிளாக்பஸ்டர்' படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 

இந்தப் பட்டியலில் பிரக்யா ஜெய்ஸ்வாலின் பெயரை ஏனோ அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இருப்பினும் அவர்களுக்கு இடையே நிலவும் கெமிஸ்ட்ரியை கருத்தில் கொண்டு அவருக்கு பிடித்த முதல் 10  கதாநாயகிகளின் வரிசை பட்டியலில் அவரும் இடம் பெறலாம்.

இதையும் படிங்க: ஆட்டம் பாட்டத்தோடு களைகட்டிய ரம்யா பாண்டியன் தம்பி பரசு திருமணம் - வைரல் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share