×
 

ஜுன் 5-ல் Thug Life ரிலீஸ்... உறுதி செய்த கமல்ஹாசன்...

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் Thug Life திரைப்படம் வருகிற ஜுன் மாதம் 5-ந் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும் என்று கமல் தெரிவித்துள்ளார்.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் Thug Life. மணிரத்னமும் - கமலும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். கமல், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் இதன் படபிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து டெல்லி, ஜெய்சால்மர் ஆகிய இடங்களிலும், செர்பியா, சைபீரியா போன்ற வெளிநாடுகளிலும் படபிடிப்புகள் நடைபெற்று வந்தன. Thug Life படத்தில் கமல் நடிக்கும் தோற்றத்தின் முன்னோட்ட காட்சிகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: காலை வாரிய 'கேம் சேஞ்சர்'.. 'இந்தியன் 3'யை நம்பும் ஷங்கர்.. புதிய அப்டேட்!

இப்படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறார். கமல் - மணிரத்னம் காம்பினேஷனில் வெளிவந்து புகழ்பெற்ற நாயகன் படத்தில் கமல் ஏற்றிருந்த வேடத்தின் பெயர் வேலு நாயக்கர் என்பதாகும். அதன் நீட்சியாக ரங்கராய சக்திவேல் நாயக்கர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பெரிய படங்கள் எல்லாம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல் ஒத்திப் போடப்படுவது பற்றி செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பினர். Thug Life திரைப்படம் சொன்ன தேதியில் அதாவது ஜுன் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் என்று கமல் உறுதி அளித்தார். 

விண்வெளி நாயகனைக் காண கமல் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: டாப் கியரில் 'குடும்பஸ்தன்' படம்... வசூல் நிலவரம் என்ன தெரியுமா.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share