பாலிவுட் நட்சத்திரங்கள் தற்போது தென்னிந்திய திரைப்படங்க ளில் நடிக்க அதிகம் விரும்புகின்றனர். பிரியங்கா சோப்ரா நீண்ட இடைவெளிக்குப்பிறகு எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் எஸ்எஸ்எம்பி -29 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.எஸ்எஸ்.எம்.பி -29
படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகு, பிரியங்கா சோப்ராவை தனது பெரிய பட்ஜெட் படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி தயார் செய்துள்ளளார்.எஸ்.எஸ்.எம்.பி-29ல் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பிரியங்கா பெற்றுள்ளார்.ஆனால் பிரியங்கா சோப்ராவுக்கு இது நஷ்டமே.

பிரியங்கா நீண்ட காலமாக இந்தி சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, ஹாலிவுட் திரைபடங்களில் நடிக்க 5 மில்லியன் டாலர்கள் அதாவது 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.அப்படிப்பட்ட நிலையில் தென்னிந்திய படத்தை ரூ.30 கோடிக்கு நடிக்க ஒப்புக்கொண்டு ரூ.10 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளார். ஒருவேளை இந்த காரணத்திற்காக நடிகை இந்தி படங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள தயாரிப்பாளர்கள் சினிமா நடிகைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதில்லை.
இதையும் படிங்க: லீக் செய்தால் லாக் தான்… ரூ.1000 கோடி பட்ஜெட் படம்… ஹீரோ- ஹீரோயினியிடம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் புதிய ஒப்பந்தம்..!
இதற்கு முன்பும் பிரியங்கா சோப்ரா இந்தி படங்களுக்கு ரூ.14 முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரது சம்பளம் இரட்டிப்பாகியுள்ளது. தென்னிந்திய, பாலிவுட் படங்களை குறைந்த கட்டணத்தில் செய்வது பிரியங்காவுக்கு நஷ்டம். இருப்பினும், ராஜமௌலியின் வரவிருக்கும் படம் ஒரு பெரிய திட்டமாகும். இந்தப் படம் தென்னிந்தியாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றும் கூறப்படுவதால், குறைந்த கட்டணத்துக்கு பிரியங்கா ஒப்புக்கொண்டிருப்பது புரிகிறது.
இதையும் படிங்க: லீக் செய்தால் லாக் தான்… ரூ.1000 கோடி பட்ஜெட் படம்… ஹீரோ- ஹீரோயினியிடம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் புதிய ஒப்பந்தம்..!