விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு, அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மேலும் இதில் பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளை கடந்தது. இரண்டு வாரங்களில் 3.5 கோடி பார்வையாளை எட்டியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மொத்தம் 27 வினாடிகள் கொண்ட இந்த ப்ரோமோ வீடியோவில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இந்த பாடலை ஆவேசமாக, பாடியுள்ளனர். தொண்டை கிழிந்து விடும் என ஜிவி பிரகாஷ் சொல்ல, அதற்கு ஆதிக் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டு பின்னர் AK என்று கத்துகிறார்.

இத்துடன் அந்த ப்ரமோ வீடியோ முடிகிறது. நாளை (மார்ச் 18) மாலை 5.05 மணியளவில் முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு எடாவன் எழுதிய இந்த பாடல், நிச்சயம் ஓஜி சம்பவம் என சொல்லப்படும் அளவிற்கு மாஸாக உள்ளது. பாடகர்களின் தொண்டை கிழியும் வகையில், பாடப்பட்ட இந்த 27 வினாடி வீடியோவையே பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். மேலும் முழு பாடலை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லியில் இதை கவனிச்சீங்களா.. தலை சுத்த வைத்த அஜித்!!