காலம் மாறி போச்சு, பழைய படம் எல்லாம் பார்ப்பதற்கு போராக இருக்கிறது என்று இப்போது உள்ள இளசுகள் சொன்னாலும், அவர்களையே சுண்டி இழுத்து பார்க்க வைக்கும் படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் தான். என்ன தான் பேட்ட, வேட்டையன், ஜெயிலர் என பட படைப்புகளை கொடுத்தாலும் அருணாச்சலம், படையப்பா, முத்து எல்லாத்தையும் விட பாட்ஷா போன்ற படைப்புகளை திரும்பவும் எடுப்பது கடினம். அப்படிபட்ட கதைக்களம், ஒரு நிமிடம் கூட சளிக்க வைக்காமல் இருக்கும் அளவிற்கு ரஜினியின் நடிப்பு இருக்கும்.

பாட்டு பல வந்தாலும் திருமணம் என்றால் "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்" உழைப்பாளர் தினம் என்றால் "உழைப்பாளி இல்லாத நாடு தான் பாட்டும்" மாட்டு பொங்கல் என்றால்" வந்தேன் டா பால் காரன்" இதை விட சூப்பர் ஸ்டார் என்றாலும் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்று அவருக்கும் பாட்டு உள்ளது. இப்படி எண்ணற்ற பெருமைகள் அப்பவும் உண்டு இப்பவும் உண்டு.
இதையும் படிங்க: புஷ்பா-னா ப்பிளவர் இல்ல.. வசூலில் கோடிகளை கடந்த ஃபயர்..!

இந்த வரிசையில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் ஆகியோரின் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா. இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டலும் ஆரவார சத்தமும் கேட்கும்.

இந்த நிலையில், தற்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, "பாட்ஷா படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி ஆட்டோம்ஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதால் வேலைகள் முடிந்த பின் இத்திரைப்படம் பார்க்க அருமையாகவும் கேட்க விசில் பறக்கும் அளவிற்கும் இருக்கும். ஆதலால் ஏப்ரல் மாதம் பாட்ஷா ரீ ரிலீஸ் செய்யப்படும் என கூறினார். பாட்ஷா படத்தை ஒருமுறை அல்ல 100 முறை போட்டாலும் பார்ப்போம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த "புஷ்பா" ஜாலி ரெட்டிக்கு கல்யாணம்..! சிக்குன பொண்ணு யார் தெரியுமா..!