விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , எதிர்நிச்சல், ரஜினிமுருகன், காக்கிசட்டை, ரெமோ, டாக்டர், அமரன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்களின் கனவு நாயகனாக அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று அவர் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23" என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு காரணம் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படம் என்பதால் அவர் பிறந்தநாளான இன்று படத்தின் பெயர் வெளியிடப்படும் என கூறப்பட்டது.
இதையும் படிங்க: இரவில் பார்த்த நடிகை பகலில் இல்லை...உலக ரசிகர்களை ஒரு நொடியில் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு!

இந்த நிலையில் படத்தின் பெயர் "மதராஸி" என்ற இனிப்பு செய்தி கிடைத்துவிட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இதற்கு இசை அமைத்து வருகிறார்.

ஆக்சன் கலந்த கதைக்களத்தில் அனிருத்தின் மிரட்டும் இசையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ளது மதராஸியின் கிளிம்ப்ஸ் வீடியோ. சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் பெயர் பிரச்சனையில் இருக்கும் நேரத்தில், மதராஸி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சௌந்தரபாண்டியின் திட்டம் அறிந்த சண்முகம்.. முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை, நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!