1999-ல் சேது திரைப்படத்தின் மூலம் பாலா இயக்குநராக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு வெற்றியை பெற்று தந்தது. இதை தொடர்ந்து 2001-ல் அவர் இயக்கிய நந்தா திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் விக்ரம், சூர்யா ஆகிய இருவரையும் வைத்து 2003-ல் பிதாமகன் என்ற படத்தை எடுத்தார். இதற்கு விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேற்கண்ட மூன்று படங்களிலும் காதாபாத்திரத்தை தனித்துவமாக வடிவமைத்திருப்பார்.

மேலும் இது இவரது ஸ்டைலாக மாறியது. 2009-ல் இவர், ஆர்யா, பூஜா உமாசங்கர் ஆகியோரை வைத்து எடுத்த நான் கடவுள் திரைப்படம் இவருக்கு சிறந்த இயக்கத்திற்கான முதல் தேசிய திரைப்பட விருதை பெற்று தந்தது. படங்களில் ஹீரோக்கள் ஸ்டைலாக தான் இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றியமைத்து இவரது அனைத்து படங்களிலும் ஹீரோக்கள் வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிப்பர். அந்த வரிசையில், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்களும் இடம்பெற்றன.
இதையும் படிங்க: அன்று போக்கிரி பொங்கல்; இன்று ஜனநாயகன் பொங்கல்... வெளியானது புதிய அப்டேட்!!

இந்த நிலையில் பாலா இயக்கிய வணங்கான் திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து பாலாவின் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சினிமா வாழ்க்கை ஒருபுறம் வெற்றியை கொடுத்தாலும் மறுபுறம் குடும்ப வாழ்க்கையில் அவர் சில பிரச்சனைகளை எதிர்கொண்டார். இதனால் அவர் தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பிரிந்து வாழ்கிறார்.

பாலாவின் படத்தில் நடிக்க சில நடிகர் தயங்குவர், மேலும் சிலர் பயம்கொள்வர். காரணம் அவர் படம் எடுக்கும் விதம். இந்நிலையில் பிரபல சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், பாலாவை பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால் அவர் எவ்வளவு நல்லவர் என்பது எனக்கு தெரியும். அவருடன் ஒரு படத்தில் வேலை செய்யும்போதுதான் உண்மையாக ஒரு வேலையை செய்வது என்னவென்று கற்றுக்கொண்டேன்.
அவரை பலரும் கடுமையான இயக்குநர் என்று சொல்வார்கள். ஆனால் பாலாவோ தன்னுடன் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி பத்திரமாய் பார்த்துக்கொள்வார் என்பது அவருடன் பயணித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: படக்குழுவுக்கு அஜீத் போட்ட அதிரடி ரூல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!