நடிகர் விஜய் தவெக வந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய சி டீம், பி டீம் இப்படி எல்லாம் சொல்றாங்களா இவங்க சொல்றதுக்கான காரணம் எல்லாம் நீங்க யோசிச்சிருக்கீங்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, சீமான் ஒரு டீம், தவெக ஒரு டீம், திமுக ஒரு டீம், அதிமுக ஒரு டீம் எத்தனை டீம் ஏறணுமோ ஏத்திக்கிட்டே போகட்டுமே. ஆனா ஒன்னே ஒன்னுதான் அனைத்து கட்சிகளையும் பாஜகவுடன் சேர்த்து வச்சி தானே பேசுறீங்க. அப்போ பாஜக வளர்ந்து இருக்குன்னு தானே அர்த்தம். பாஜக தமிழகத்தில் வளரவே இல்லைன்னா, நீங்க ஏன் இத்தனை டீமைப் பற்றி கவலைப்படுறீங்க.

இது எங்களுக்கு மகிழ்ச்சி தான் .என்ன டீம் வேணாலும் நீங்க சொல்லிட்டு போங்க நாங்க வளர்ந்து வருகிறோம். பாஜகவிற்கு எதிரின்றது கிடையாதுப்பா நான் எல்லார்கிட்டயும் நட்போட தான் இருப்போம் எங்களை எதிர்க்கட்சியா யார் பார்க்கிறாங்க அவங்க கிட்ட போய் கேளுங்க எங்களுக்கு எதிரி எல்லாம் கிடையவே கிடையாது.
இதையும் படிங்க: டெல்லி போல 2026இல் தமிழகமும் பாஜக கையில்... தாமரை மலர்ந்தே தீரும் மோடில் தமிழிசை சவுந்திரராஜன்.!

ஆனால், கொள்கை ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகம் எங்கள் எதிர்க்கட்சி, காங்கிரஸ் எதிர்க்கட்சி இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிர்க்கட்சி. 2026 தேர்தலை சந்திக்கணுமா இந்த மாதிரியான கூட்டணி கட்சிகள் எல்லாம் இருந்தா எங்களுக்கு ரொம்ப ஒரு சாட்டிஸ்பேக்ஷனா ரொம்ப ஒரு பவர்ஃபுல்லா இருக்கும் அப்படின்னா என்ன மாதிரியான கூட்டணி கட்சிகள் எல்லாம் வேணும்னு நினைக்கிறீங்க மக்கள் விரும்புகின்ற கூட்டணி மக்கள் யாரெல்லாம் தாமரை மலரச் செய்கின்ற கூட்டணி தாமரை தமிழ்நாட்டில் மலர்ந்து தீரும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி முதலிடம் பிடித்த உத்தரப்பிரதேசம் - தமிழக அரசை தெறிக்கவிட்ட தமிழிசை செளந்தர ராஜன்!