"பராசக்தி" அடுத்து "பரமசிவன் பாத்திமா"... நடிகர் விமலின் அடுத்த படத்தின் அப்டேட்..!
நடிகர் விமலின் நடிப்பில் உருவாகியுள்ள பரமசிவன் பாத்திமா படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்று பல முன்னணி நடிகர்கள் அனைவரும், தங்கள் வாழ்க்கையில் பலரது கண்களுக்கு தென்படாத நூற்றுக்கணக்கான துணை கதாபாத்திரங்களில் நடித்து இன்று தன்னுடைய திறமையால் வெளிவந்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் வரிசையில் இன்று, நடிகர் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரை குறிப்பிடும் பொழுது நடிகர் விமல்(லை) என்றும் மறக்க முடியாது.
தனது ஆரம்ப காலத்தில், கில்லி, கிரீடம், குருவி உள்ளிட்ட பல படங்களில் கண்ணுக்குத் தெரியாத துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி பல வருடங்களாக துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த விமலின் நடிப்பு திறமையை பார்த்த பாண்டிராஜ் கடந்த 2009 ஆண்டு இயக்கிய "பசங்க" படத்தில் விமலுக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.அதில் மீனாட்சிசுந்தரம் என்ற காப்பீட்டு முகவர் கதாபாத்திரத்தில் தனது வாழ்க்கையில் தொழில் தொடங்கி முன்னேறி இருப்பதை போல் கதையை உருவாக்கி இருப்பார்.
இதையும் படிங்க: தனது மனைவியால் வாடகை வீட்டிற்கு சென்ற ஷாருக்கான்... இப்படி ஒரு நிலைமை இவருக்கா... குமுறும் நெட்டிசன்கள்...!
இதனைத் தொடர்ந்து ஓவியாவுடன் களவாணி, தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூன்று பேர் மூன்று கடல், தேசிங்கு ராஜா , புலிவால், மாப்பிள்ளை சிங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார். நடிகர் சிவகார்த்திகேயனும் இவரும் நடித்த கேடிபில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தையும், வாகை சூடவா திரைப்படத்தையும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாத படமாக உள்ளது. விமலின் சிறந்த காமெடி படம் என்று சொன்னால் அது களவாணி மற்றும் கலகலப்பு இரண்டுமே.
சில நாட்களாக நடிகர் விமலின் எந்த ஒரு திரைப்படமும் வெளியிடப்படாத நிலையில், பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'தமிழ் குடிமகன்' என்ற திரைப்படத்தின் இயக்குநரான 'இசக்கி கார்வண்ணன்' இயக்கத்தில், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிகர் விமலும் "பரமசிவன் பாத்திமா" திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த நிலையில் இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அடுத்ததாக இயக்குநர் இசக்கி கார்வண்ணன், படத்தின் ப்ரோமோ வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார்' என்ற திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், "பரமசிவம் பாத்திமா" திரைப்படமும் வெற்றி அடைய வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் மீது காதல் வயப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்... உண்மையை உடைத்த அவரது மனைவி.. இனி அவ்வளவுதான்...!