ஹாரர் பாத்தாச்சு... அடுத்து திரில்லர்..! கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் நடிகை..!
தமிழில் அரண்மனை படத்தில் நடித்த நடிகை ஹாலிவுட்டில் நடிக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாவில் என்றும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கன்னா, தனது மிரளவைக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுமட்டுமல்லாது சிவந்த மேனியியில் மெய் சிலிர்க்கும் இவரது சிரிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட இவர் எந்த படத்தில் நடித்தாலும் தேடி தேடி பார்ப்பவர்களும் அதிகம். அந்த அளவிற்கு தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் தான் ராஷி கன்னா.
தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக இவர் நடித்த அரண்மனை நான்காம் பாகத்தில் வந்த "அச்சச்சோ" பாடலில் கவர்ச்சியாக தமன்னா மற்றும் ராஷி கன்னா தனது நடத்தை அற்புதமாக வெளிக்காட்டி ரசிகர்களை மேலும் கவர்ந்தனர்.
இதையும் படிங்க: ஹனிமூன் வைஃப் போட்டோ... கிளாமரில் ஹார்ட் டச் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்...! ரசிகர்கள் ஆரவாரம்..!
இதன் தொடர்ச்சியாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஜீவா, அர்ஜுன் சர்ஜா மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாபாத்திரத்திலும் எட்வர்ட் சோனன்ப்ளிக், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, அழகம் பெருமாள், இந்திரஜா சங்கர், மாடில்டா ஆகியோர் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்து பிப்ரவரி 28ம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் அதிரடி நகைச்சுவை கலந்த திகில் திரில்லர் படம் தான் "அகத்தியா".
இந்த நிலையில், அகத்தியா படத்தின் "பிரீ ரிலீஸ்" நிகழ்ச்சியில் இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கன்னா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.அப்போது பேசிய ராஷி கன்னா, ‛‛தான் தமிழில், அரண்மனை 3 மற்றும் 4 ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளேன். ஹாரர் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனை தொடர்ந்து இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ஆதலால் படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும். எனவே,அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர்கள் அவரிடம், தமிழில் இந்தியா முழுவதும் உங்க படம் ஹிட் தான், ஆனால் இதனை தொடர்ந்து எப்பொழுது ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராஷி கண்ணா, ‛அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் அதற்க்காக தான் காத்து கொண்டு இருக்கிறேன்' என கூறினார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக பிரியங்கா சோப்ரா போல ஒருநாள் வருவீர்கள் ராசி கன்னா என்று பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுக்காத ஹீரோயின்.. பின் வந்தவர் தான் தமன்னா.."பையா" இயக்குநர் ஹார்ட் டச் ஸ்பீச்..!