சௌந்தரபாண்டியின் திட்டம் அறிந்த சண்முகம்.. முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை, நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சண்முகம் பரணியை அமெரிக்கா போக வேண்டாம் என சொன்னதால் பரணி அவன் மீது கோபமான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சௌந்தரபாண்டி பரணியை அமெரிக்க அனுப்பி வைத்து சண்முகம் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என திட்டம் போட்டு இருந்ததை அறிந்ததா சண்முகம் இப்படி போக வேண்டாம் என்று சொன்னான் என்பது தெரிய வருகிறது.
ஆனால் இதை எப்படி பரணியிடம் சொல்வது என புரியாமல் தவிக்கிறான். மறுபக்கம் இசக்கி அண்ணா ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி சொல்லி இருக்கு கண்டிப்பா பரணியை வெளிநாடு அனுப்பி வைக்கும் என்று சொல்ல முத்துப்பாண்டி அவன் அனுப்பலனாலும் நான் அனுப்பி வைப்பேன் என் தங்கச்சி ஆசைப்பட்டது நடக்க வேண்டாமா என்று சொல்கிறான்.
இதையும் படிங்க: வாழ்க்கையை தொடங்கிய முத்துப்பாண்டி - இசக்கி; சௌந்தரபாண்டி கனவு பலிக்குமா? - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!
இதையெல்லாம் தாண்டி அடுத்த நாள் காலையில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் பரணி வழக்கம் போல எல்லாவிதமான வேலைகளையும் செய்து அனைவருக்கும் தேவையானதை செய்து கொடுக்க வைகுண்டம் இதை பார்த்து சந்தோஷப்படுகிறார். சூடாமணிக்கு அடுத்ததா பரணி தான் இந்த குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்கிறா.. அவ இல்லனா என்ன ஆகிறது என யோசிக்கிறார்.
சண்முகம் எலே உனக்கு கொண்டு போய் விடணுமா என்று கேட்க இத்தனை நாளா நீதானே கொண்டு போய் விடுவ இன்னைக்கு நீதான் கொண்டு போய் விடனும் என்று சொல்கிறாள். சண்முகம் இந்த நேரத்துக்கு ஒரு சண்டை வெடித்து இருக்கணுமே இவ என்ன இப்படி சொல்றா என குழப்பம் கொள்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: மதுரையை நோக்கி நடக்கும் சேஸிங்.. குழந்தையின் உயிரை காப்பாற்றுவார்களா? பரணி - ஷண்முகம்! அண்ணா சீரியல் அப்டேட்!